சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஒலக்கூர், சாரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

Increasing temperatures than normal in Chennai, Weather Research Center Information

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் 7 சென்டி மீட்டார் மழையும், திண்டிவனத்தில் 5 சென்டி மீ ட்டர் மழையும் பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலை சார்ந்த பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"அக்கா.. நீங்க இப்படி செய்யலாமா.. எவ்ளோ மரியாதை வெச்சிருந்தோம்".. மன்னிப்பு கேட்ட நிஷா

இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்தது.இன்று காலை புளியரை,குண்டாறு, மேக்கரை, செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தும் அருவிகளில் அதிக நீர் விழவில்லை.

சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்த நிலையில் குறைந்த அளவே விழும் நீரில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நிற்க வைத்து குளிக்க அனுமதித்தால் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் நீர்வரத்து அதிகரித்து அருவிகளில் நீர் கொட்டியது. தற்போது, மழையின் அளவு குறைந்ததால், தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

தண்ணீர் பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கிடைக்கும் நீர் ஆதாரங்களை மட்டும் நம்பாமல் மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது என்றும், பொதுமக்கள் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தி உள்ளார்.

English summary
Chennai, Kanchipuram and Thiruvallur districts will increase by 2 to 3 degrees Celsius above normal In the next 24 hours, Chennai Meteorological Center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X