• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அல்லும் பகலும் தொடர்ந்து உழைப்போம்... இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - முதல்வர் பஞ்ச்

|

சென்னை: மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன். அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன் என்று முதல்வர் கூறியுள்ளதன் மூலம் தனது கட்சிக்காரர்களுக்கு எதையே உணர்த்தியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. அதே போல இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்றும் சொல்லி எதிர்கட்சியினருக்கும் மெசேஜ் சொல்லியிருக்கிறார்.

நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவில் 4வது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து பேசினார்.

4வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்ததில் பெருமையடைகிறேன். சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 16,000 ஆயிரத்திலிருந்து ரூபாய் 17,000 ஆக உயர்த்தப்படும். வீரர்கள் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வு ஊதியம் சிறப்பு ஊதியம் ரூ. 8 ஆயிரத்திலிருந்து 8,500 ஆக உயர்த்தப்படும்.

74வது சுதந்திர தினம்.. சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கொரோனா தடுப்பு பணி

கொரோனா தடுப்பு பணி

தமிழகத்தில் தான் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. தமிழக அரசு நிதி ஆதாரத்தை கொண்டு கொரோனா தடுப்பு பணிக்கு 6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

உள் ஒதுக்கீடு

உள் ஒதுக்கீடு

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும் என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், "ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ 300 கோடியில் திட்டம், பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்த மகளிர் குழுவிற்கு சுழல்நிதி மற்றும் கடன் வழங்கப்படும்.

தமிழகம் முதன்மை மாநிலம்

தமிழகம் முதன்மை மாநிலம்

உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உடுமலைபேட்டையில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் கொண்டுவரப்படும். குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க ரூ 7,500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும்.

பொருளாதாரத்தில் முன்னேறும்

பொருளாதாரத்தில் முன்னேறும்

கொரோனா காலத்திலும் பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று கூறிய அவர் பொருளாதாரத்தில் தமிழகம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சரித்திரம் சொல்லும்

சரித்திரம் சொல்லும்

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்று சொல்வது போல கொரோனா தொற்றில் இருந்து தமிழகம் வென்றிருக்கிறது. அதே போல எதிர்கட்சியினரை வெல்லும் ஆற்றல் அதிமுகவிற்கு இருக்கிறது.

அயராது பாடுபடுவேன்

அயராது பாடுபடுவேன்

மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன். அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பலவித சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் முதல்வர் பழனிசாமியின் இந்த பேச்சு பரபரப்பான அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chief Minister Palanichamy has conveyed anything to his party members by saying that he will continue to work for the people of Tamil Nadu day and night. He has also sent a message to the opposition on how to overcome this defeat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X