சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய விடுதலைப் போரில் மருதநாயகம் என்ற கான்சாகிபின் தீரமும் துணிவும் போற்றுதலுக்குரியது.

நாட்டின் 74-வது விடுதலை தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்த தேசத்தின் விடுதலை என்பது சும்மா, சுக்கு மிளகு போல் கிடைத்துவிடவில்லை.

200 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா என்கிற தேசத்தை ஆங்கிலேயர் உருவாக்குவதற்கு முன்னரே தென்னிந்தியாவில் தமிழ்நிலத்தில் ஆதிக்கம் செலுத்திய அந்நியருக்கு எதிராக வீரஞ்செறிந்த யுத்தங்கள் நடந்தேறின.

Independece Day: Life History of Maruthanayagam Pillai alias Khan Sahib

வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள் என எண்ணிறந்த திண்ணிய மறவர்கள் இருக்கிறார்கள். மருது சகோதரர்கள் என்றால் அந்த இருவர்தான் என்று இல்லை.. தமிழ்நிலத்தில் குறுநில மன்னர்களாக இருந்த பாகனேரி வாளுக்கு வேலி, விருப்பாட்சி கோபால நாயக்கர் போன்ற மான மறவர்கள் ஏராளம்.

தற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்- சீமான்தற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்- சீமான்

இந்த வராற்றுச் சிறப்புமிக்க விடுதலைப் போரில் மருதநாயகம் என்ற கான்சாகிபின் சரித்திரமும் உன்னதமானது. (கமல்ஹாசன் இவரது வரலாற்றைத்தான் படமாக்குவதாக அறிவித்திருந்தார்) முதுபெரும் தமிழ் ஆய்வறிஞர் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்கள், 1960-ம் ஆண்டு கும்மந்தான் கான்சாகிபு என்ற பெயரில் சிறு ஆய்வு நூலை வெளியிட்டார்.

இதுதான் மருதநாயகம் என்ற கான்சாகிபுவின் வரலாற்றை விவரிக்கும் முதலாவது நூல். இந்த நூலை தமிழ் இணைய பல்கலைக் கழகம் அனைவரும் படிக்க பதவியேற்றம் செய்திருக்கிறது..

நீங்களும் படியுங்கள்...

English summary
Here is the Life History of Maruthanayagam Pillai alias Khan Sahib.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X