சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்வியாளர் செல்வத்துக்கு....பன்னீர் செல்வத்துக்கு.... விஜய பாஸ்கருக்கு... சிறப்பு விருதுகள்!!

Google Oneindia Tamil News

சென்னை: டாக்டர் அப்துல் கலாம் விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நடத்தி ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வரும் ச.ஆனந்தம் செல்வத்திற்கு வழங்கப்பட்டது.

சென்னையை சேர்ந்தவர் ஆனந்தம் செல்வகுமார். இவர் ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்வி கட்டணங்களை வழங்கி வருகிறார். இவரது இந்த சேவையைப் பாராட்டி தமிழக அரசு இவரை அப்துல் கலாம் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

Independence day 2020: Abdul Kalam award to academic K Selvam

இவருடன் சேர்த்து இன்று செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகியோருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. கொரோனா பணிக்கான சிறப்பு விருது உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் சௌமியா சுவாமிநாதணுக்கு வழங்கப்பட்டது.

மருத்துவ சேவை கழகத்திற்கான நல் ஆளுமை விருது மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டது. நல் ஆளுமைக்கான விருது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கபப்ட்டது

இன்னும் 1,000 நாட்களில்.. அனைத்து கிராமங்களும் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கில் இணையும்- மோடி அறிவிப்பு இன்னும் 1,000 நாட்களில்.. அனைத்து கிராமங்களும் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கில் இணையும்- மோடி அறிவிப்பு

சிறந்த மாநகராட்சியாக வேலூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சி விருது விழுப்புரம், கரூர், கூத்தநல்லூர் நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வனவாசி (சேலம்), வீரபாண்டி (தேனி), மதுக்கரை (கோவை) சிறந்த பேரூராட்சிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 27 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இறுதியாக விருது பெற்றவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

English summary
Independence day 2020: Abdul Kalam award to academic K Selvam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X