சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் கையில் விருது பெறும்... தமிழக போலீசார் பட்டியல்!!

Google Oneindia Tamil News

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு திறமையாக செயல்பட்ட 23 தமிழ்நாடு போலீசாரை ஜனாதிபதிக்கான விருதுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் ஜனாதிபதி விருதுக்கு திறமை, துணிச்சலான செயல்களின் அடிப்படையில் போலீசார் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். நடப்பாண்டில் தமிழ்நாட்டில் இருந்து 23 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Independence day 2020: President and Tamil Nadu government award winners from TN police full list

சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, 2020 ம் ஆண்டுக்கான சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

1. திரு. சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப.,
கூடுதல் காவல்துறை இயக்குநர், தொழில் நுட்பப் பணிகள், சென்னை,
முன்னாள் காவல் ஆணையர், மதுரை மாநகரம்.

2. திரு.கி.சங்கர், இ.கா.ப.,
காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

3. திரு ச.சரவணன்,
காவல் துணைஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு,
திருநெல்வேலி மாநகரம்.

4. மருத்துவர் (திருமதி) ச.தீபா கணிகர், இ.கா.ப.,
காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம்.

5. திரு.பி.ஜெகன்நாத்,
தலைமை காவலர் 19917, வேலை வாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு,

புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அங்கீகரித்தும் இந்த விருது வழங்கப்படுகிறது. கீழ்க்கண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு 2020ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணி பதக்கங்கள் இன்று வழங்கப்படுகிறது.

1. திருமதி ஜி.நாகஜோதி
காவல் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு,
சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்.

2. திரு இரா.குமரேசன்,
காவல் துணை கண்காணிப்பாளர்,
"கியூ" பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

3. திரு தி.சரவணன்,
காவல் உதவி ஆணையர்,வடக்கு சரகம்(குற்றம்), சேலம் மாநகரம்.
4. திரு எஸ்.கே.துரை பாண்டியன்,
காவல் துணை கண்காணிப்பாளர்,
காட்பாடி உட்கோட்டம்,வேலூர் மாவட்டம்.

5. திரு ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ்,
காவல் ஆய்வாளர்,ஓருங்கிணைந்த குற்றப்பிரிவு,
குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை,திருச்சி மாநகரம்.

6. திருமதி பி.எஸ்.சித்ரா,
காவல் ஆய்வாளர்,மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் ,
திருச்சி மாநகரம்.

7. திருமதி கா. நீலாதேவி,
காவல் ஆய்வாளர், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம்,
சிவகங்கை மாவட்டம்.

8. திருமதி ச.பச்சையம்மாள்,
காவல் ஆய்வாளர்,அரக்கோணம் இருப்புப்பாதை காவல் நிலையம்,
இருப்புப்பாதை காவல் சென்னை.

9. திருமதி ப.உலகராணி,
காவல் ஆய்வாளர்,குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை,
திருநெல்வேலி.

10. திருமதி பி.விஜயலட்சுமி,
காவல் ஆய்வாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு,
திருநெல்வேலி.

விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். இவர்களுக்கு இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்..

இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.. அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை- மோடி இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.. அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை- மோடி

English summary
Independence day 2020: President and Tamil Nadu government award winners from TN police full list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X