சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தியாகிகள் பென்ஷன்... ரூ. 16000த்தில் இருந்து ரூ. 17000ஆக உயர்வு... முதல்வர் உத்தரவு!!

Google Oneindia Tamil News

சென்னை: கோட்டை கொத்தளத்தில் திறந்த ஜீப்பில் போலீசாரின் அணு வகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார். 4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன் என்றார்.

அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காலை 8.33 மணிக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார்.

Independence day 2020: Tamil Nadu CM Edappadi Palanisamy increase Freedom fighters pension

பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் - ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது ''சுந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடம்ப ஓய்வூதியம் சிறப்பு ஊதியம் ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ. 8,500 ஆக உயர்த்தப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீட்டில் 7.5% வழங்கக் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கக்ளுடன் சுமூக உறவுடன் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. 2.01 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய ஹெல்த் மிஷன் திட்டம்.. மோடி அதிரடி அறிவிப்பு.. அனைவருக்கும் ஹெல்த் ஐடி கார்டு வழங்கப்படும் தேசிய ஹெல்த் மிஷன் திட்டம்.. மோடி அதிரடி அறிவிப்பு.. அனைவருக்கும் ஹெல்த் ஐடி கார்டு வழங்கப்படும்

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்தாண்டு தூர்வாறப்பட்டது. இதனால் வழக்கத்தை விட 10 நாள்களுக்கு முன்னதாக காவிரி நீர் கடை மடை வந்து சேர்ந்தது. சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நதிகள், ஓடைகளில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ1433 கோடி மதிபில் 6278 நீர் நிலைகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா பணிக்காக தமிழக அரசு ரூ. 6650 கோடி செலவு செய்துள்ளது. மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் விரைவில் திறக்கப்படும். மாநில அரசு நீட் தேர்வு கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக அரசு அல்லும் பகலும் உழைத்துக் கொண்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ வசதிகளுடன் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சதவீதம் மிகவும் குறைவாக இருக்கிறது. மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன்

இவ்வாறு பேசினார். பின்னர் விருது சிறப்பு விருதுகளை வழங்கினார்.

டாக்டர் அப்துல் கலாம் விருது - ச.செல்வம் - ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை

கல்பனா சாவ்லா விருது - செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கொரோனா பணிக்கான சிறப்பு விருது - மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் - உலக சுகாதார நிறுவனம்

சிறந்த மாநகராட்சியாக வேலூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கரூர், கூத்தநல்லூர் நகராட்சிகள் சிறந்த நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வனவாசி (சேலம்), வீரபாண்டி (தேனி), மதுக்கரை (கோவை) சிறந்த பேரூராட்சிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 27 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

English summary
Independence day 2020: Tamil Nadu CM Edappadi Palanisamy increase Freedom fighters pension
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X