சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

74வது சுதந்திர தினம் : பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், தியாகிகள் வீட்டிலேயே கொண்டாடுங்க

74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த சூழ்நிலையில், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக நாள்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியத் திருநாட்டின் 74வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் திங்கள் 15ஆம் தேதி காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.

Independence Day Celebration: School students, senior citizens, celebrate at home

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.

இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும், நாள்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினம்.. இந்திய தேசிய கீதமும், தேசிய பாடலும்.. யார் எழுதியது.. என்ன பின்னணி? சுதந்திர தினம்.. இந்திய தேசிய கீதமும், தேசிய பாடலும்.. யார் எழுதியது.. என்ன பின்னணி?

ஆண்டுதோறும் வளாகத்தில், இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்களின் சார்பாக மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

English summary
74th Independence Day Celebration School children, college students and senior citizens are advised not to attend the event due to the unusual situation prevailing with the corona epidemic this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X