சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

74வது சுதந்திர தினம்...சுதந்திரக் காற்று சுவாசிக்க இவர்கள்தான் காரணம்!!

Google Oneindia Tamil News

சென்னை: நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாட நாடே தயாராகி வருகிறது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகளாக, 1757ல் இருந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். அடக்குமுறையில் இந்தியாவை வைத்து இருந்தனர். 1947, ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 12 மணிக்கு நாட்டுக்கு சுதந்திரம் கொடுத்தனர்.

சுதந்திரம் சாதாரணமாக இந்தியாவுக்கு கிடைத்து விடவில்லை. ஏராளாமான மரணங்கள், தியாகங்கள், நாட்டின் வளங்களை இழந்து பெறப்பட்டது. சுதந்திரத்தின் உருவமாக மகாத்மா காந்தி பார்க்கப்படுகிறார். தேசியக் கொடியை முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார். இன்று 74வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செங்கோட்டை தயாராகி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பெரிய அளவில் இந்த முறை கொண்டாட்டம் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் விழாக்கள் முறையாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை பார்ப்போம்.

மெரினா பாணியில் தன்னெழுச்சியாக வந்த இளைஞர்கள்.. உடைந்த பாலத்தை 5 மணி நேரத்தில் சரி செய்து புரட்சிமெரினா பாணியில் தன்னெழுச்சியாக வந்த இளைஞர்கள்.. உடைந்த பாலத்தை 5 மணி நேரத்தில் சரி செய்து புரட்சி

சட்ட அமைச்சர்

சட்ட அமைச்சர்

சமூக புரட்சி, நவீன இந்தியாவுக்கு தனது புரட்சிகள் மூலம் வித்திட்டவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார். ஓடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். தீண்டத்தகாதவர்களுக்கு (தலித்துகளுக்கு), சமூக பாகுபாடுகளுக்கு எதிராக போராடினார். பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை ஆதரித்து பேசி வந்தார்.

மண்டியிட மாட்டேன்

மண்டியிட மாட்டேன்

மகாராஷ்டிரா மாநிலத்தின் குயின் என்று அழைக்கப்படுகிறார். ஜான்சியை ஆட்சி செய்தவர். சுதந்திர போராட்ட முதல் வீரப்பெண்மணி. ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து போரிட்டார். ஆணைகளுக்கு எதிராக போரிடுகிறேன், அதுதான் ராணி லட்சுமிபாய் என்று முழக்கமிட்டவர். 1858ஆம் ஆண்டு தனது ஜான்சி கோட்டையை பிடிக்கப் போவதாக சர் ஹூயு ரோஸ் அறிவித்தார். ஆனால், அவர்களுக்கு முன்பு மண்டியிட மாட்டேன் என்று அவர்களை எதிர்த்து போரிட்டார். 1858 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் காயம் அடைந்து வீரமரணம் அடைந்தார்.

நைட்டிங்கேர்ள்

நைட்டிங்கேர்ள்

இந்தியாவின் நைட்டிங்கேர்ள் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர். 1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டது. அப்போது சுதந்திர போராட்டத்தில் குதித்தார். 1903 முதல் 1917ஆம் ஆண்டுகளில் கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், சி.பி.ராமஸ்வாமி ஐய்யர், மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது.

மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரை மேற்கொண்டவர். காந்தி, கஸ்தூரி பாய் காந்தி கைதுக்குப் பின் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். 1919 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசாங்கம் ரௌலெட் சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து, இயக்கத்தில் தன்னை முதலில் இணைத்து கொண்டார். இந்தியாவின் முதல் ஆளுநராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பெண்களின் முன்னேற்றம், சமூக நலம் குறித்துப் பேசினார். பெண்களுக்கு என்று இந்திய பெண்கள் கழகம் ஒன்றை துவக்கினார்.

இரும்பு மனிதர்

இரும்பு மனிதர்

குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். இந்த மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தியவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முழக்கமிட்டவர். இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர். உள்துறை அமைச்சராகவும் இருந்தார். பிரிந்து கிடந்த மன்னர் ஆட்சிகளை, 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய இந்தியாவை உருவாக்கியவர்.

காந்தி சிறையில் இருந்தபோது, சத்யாகிரகப் போராட்டத்தை நாக்பூரில் நடத்தினார். சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றவர். இந்திய விவசாயிகளுக்கு உயிர் ஊட்டியவர் என்று கருதப்பட்டவர்.

முதல் ஆசிரியை

முதல் ஆசிரியை

காங்கிரஸ் வானொலியை உருவாக்கியவர். இதை காங்கிரசின் ரகசிய வானொலி என்றும் அழைத்தனர். 1983ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது இந்த வானொலி செயல்பட்டு வந்தது. சமூக சீர்திருத்தவாதி, கவிஞர் என்று பல அவதாரம் எடுத்து இருந்தார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தனது கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டார். பெண்களின் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவுக்கு அருகில் துவக்கினார் என்று இன்றும் அவர் நினைவு கூறப்படுகிறது. இவருக்கு இந்திய அரசு நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பதம் விபூஷன் விருது வழங்கி இருந்தது.

மரணத்தில் மர்மம்

மரணத்தில் மர்மம்

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர். சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் பற்று கொண்டவர். 1938 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். 1945 ஆகஸ்ட் 18ல் தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆண்டு அந்த நாட்டில் எந்த விபத்தும் நடக்கவில்லை என்று தைவான் தெரிவித்தது. இந்த நிலையில்தான் அவர், வடஇந்தியாவில் ஒரு துறவி போல் வாழ்ந்து 1985ல் மரணம் அடைந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இவரது இறப்பு மர்மமாகவே இருக்கிறது.

தூக்கில் போடப்பட்டார்

தூக்கில் போடப்பட்டார்

தனது 13 வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். அகிம்சை வழியில் நம்பிக்கை இழந்து ஆயுதம் தாங்கி போரிட்டு சுதந்திரத்தை அடைய முடியும் என்று நம்பியவர். 1929ஆம் ஆண்டில் லாலா லஜபதி ராய் மரணத்துக்கு பலி வாங்க வேண்டும் என்று களத்தில் இறங்கியவர். தொழிலாளர் சட்டத்துக்கு எதிராக சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமான காவல் அதிகாரிகளை சுட்டுக்கொன்றது ஆகிய குற்றங்களுக்காக பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு ஆங்கிலேய அரசு 1931, மார்ச் 23 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றியது.

கொடி காத்த குமரன்

கொடி காத்த குமரன்

ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் பிறந்தவர். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியது. தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் நடத்தப்பட்ட மறியலில் பங்குகொண்டு, 1932, ஜனவரி 10 ஆம் தேதி, கையில் தேசியக் கொடி ஏந்தியவாறு சென்றார். அப்போது காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இவரை கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படுவதும் உண்டு.

ஆங்கிலேயர்களின் வரி

ஆங்கிலேயர்களின் வரி

ஆங்கிலேயர்களின் வரியை எதிர்த்து போரிட்டவர். கட்டபொம்மனிடம் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை வரி கேட்க நேரில் சென்றார். அப்போது, ''நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா? வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? என்று கேள்விகளை அடுக்கியவர். இன்றும் இந்த வசனங்கள் பிரபலமாக இருக்கிறது.

English summary
Independence day: The greatest freedom fighters of our country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X