சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவின் வாலை ஒட்ட நிறுக்கணும்.. என்னா அகம்பாவம்.. 20 பேரின் தியாகத்தால் மக்கள் கொதிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: லடாக் எல்லையில் என்ன நடந்தது என்பது உண்மையிலேயே என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்கு இன்னும் சரியாக தெரியவில்லை.. ஆனால் சீனாவுக்கு உடனடியாக பதிலடி தரும் நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளது.

Recommended Video

    India-China border : இந்தியாவிடம் உறவாடி முதுகில் குத்தும் சீனா..நேரு முதல் மோடி வரை - முழு விபரம்

    சீன அதிபர் நல்லாதான் மாமல்லபுரம் வந்து பேசிவிட்டு போனார்.. வேட்டி கட்டினார்.. இளநீர் குடித்தார்.. எல்லாம் செய்தார். இரு நாட்டு உறவுகளும் நன்றாக இருப்பதுடன், வருங்காலத்திலும் உறவு பலப்படும் என்றும் நம்பப்பட்டது.. எல்லை பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் எல்லாமே சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.. பெரிய அளவுக்கு பிரச்சனைகள் இப்போது எழாத நிலையில் ஏன் இந்த கொலை வெறி? என்று தெரியவில்லை. கொடூரமாக கல்லால் அடித்து நமது வீரர்களின் உயிரைப் பறித்துள்ளனர் சீன வெறி ராணுவத்தினர். இத்தனைக்கும் ஆரம்ப கட்டத்தில் இருந்ததைவிட இப்போது சுமூகமாகவே இந்தியா சீனாவை அணுகி வருகிறது. அப்படி இருந்தும் 20 பேர் மிக கொடூரமாக உயிரிழந்துள்ளனர். இதுதான் ஆத்திரமாக வருகிறது.

    நம் வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு என்ன தைரியம்.. மோடி மௌனம் ஏன்? எதை மறைக்கிறார்.. ராகுல் நம் வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு என்ன தைரியம்.. மோடி மௌனம் ஏன்? எதை மறைக்கிறார்.. ராகுல்

    மோதல்

    மோதல்

    கடந்த ஜுன் 6ம் தேதி ஒரு செய்தி வெளியே வந்தது.. இரு நாட்டுக்கும் இடையே நடந்த ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இரு நாட்டு ராணுவங்களும் மோதல் ஏற்படும் பகுதிகளில் இருந்து பின்வாங்கும் எனக் கூறப்பட்டது.. ஆனால் தற்போது நடந்துள்ளதைப் பார்த்தால் அங்கு ஒரு போரே நடந்துள்ளதாகவே அனுமானிக்க வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு பிறகு இந்தியர்களின் உயிரைப் பறித்துள்ளது சீனா.

     கல்வான் பகுதி

    கல்வான் பகுதி

    கல்வான் பள்ளத்தாக்கு வரை பாலம் அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது... இதற்குதான் சீனா கொந்தளித்தது. இந்த சாலை போக்கூடாது என்று சொல்லி, தன்னுடைய படைகளையும் குவித்தது.. கல்வான் பகுதி வரை ஏற்கனவே சீனா சாலை அமைத்துள்ளது நிலையில், தற்போது பதற்றம் மூள தொடங்கி உள்ளது.. ரெண்டு நாடுகளும் ஆளுக்கு ஒரு பக்கம் படைகளை குவித்ததால் அங்கு பதற்றம் நிலவியது. இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதாலேயே இந்த கல்வான் பகுதியை இந்தியாவும் சீனாவும் முக்கியத்துவம் நிறைந்த பகுதியாக பார்க்கின்றன.

    எல்லை

    எல்லை

    இந்தப் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் கட்டுப்பாட்டு எல்லை கோடுதான் இந்தியா-சீனாவை பிரிக்கிறது... இப்போதைக்கு அக்சாய் சீனா (அதாவது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதி) சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த பகுதி நமக்கு சொந்தமானது. 1962-ஆம் ஆண்டு நடந்த போரின் முக்கியத்துவமும் இதைதான் உணர்த்துகிறது.

     கெட்ட பெயர்

    கெட்ட பெயர்

    உண்மையில் இந்தியா மீது சீனா பாய, இது ஒன்றுதான் காரணமா? இல்லை, முழுக்க முழுக்க இந்தியாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தவே சீனா முயல்கிறது.. அத்துடன் உலகம் முழுவது தனக்கு கெட்ட பெயர் உள்ளதாலும், தன் மீதான சீன வைரஸ் பழியையும் திசை திருப்பும் முயற்சியாகவேவுமே இப்படி ஒரு தந்திரத்தை கையாள ஆரம்பித்துள்ளது.. மூன்றாவது காரணம், அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்பும் எண்ணத்தில் உள்ளனர்.. நான்காவது இந்தியாவும் அமெரிக்காவும் மேலும் நெருக்கமாகி விடுவார்களே என்ற பீதியும் சீனாவுக்கு உள்ளது.

     பார்முலா

    பார்முலா

    சீனாவை பொறுத்தவரை எது செய்தாலும் தந்திரக்காரத்தனமாகவே செய்யும். என்பது கடந்த கால வரலாறு.. அடுத்து 100 வருஷத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்பதைகூட இன்றே பிளான் செய்து கொள்ளும்.. அதன்படிதான் முதலில் எல்லையை ஆக்கிரமிக்கும், பிறகு தாக்குதல், அடுத்து பின்வாங்குவது போல ஒரு பாவ்லா.. இறுதியாக போர்.. இதுதான் சீனாவின் வழக்கமான ஃபார்முலா.

     வீரர்கள்

    வீரர்கள்

    இது இத்துடன் முடியாமல் இன்னும் பெரிய அளவுக்கு மோசமான நிலைமைக்கு கொண்டு போகும் என்றே அச்சம் ஏற்பட்டுள்ளது. நேரு காலத்தில் இருந்ததை விட இப்போது இந்திய ராணுவம் நல்ல வலிமையுடன் உள்ளது. சீனாவுக்கு சமமான பதிலடியைத் தரும் அளவுக்கு வலிமையுடனேயே நாம் உள்ளோம். ராணுவத்திற்காக நம் நாடு வருஷத்துக்கு 4, 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது என்றும், சீனாவோ, வருஷத்துக்கு 17 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்கிறது என்றும் செய்திகள் கூறகின்றன... ஆனால் வீரர்களை பொறுத்தமட்டில் இந்தியா சீனாவுக்கு டஃப் கொடுப்பதாகவே உள்ளது.. 21 லட்சத்து 40 ஆயிரம் வீரர்கள் நமக்கு உள்ளனர் என்றால், சீனாவுக்கு 23 லட்சம் வீரர்கள் உள்ளனர்.

     உயிர் ஊசல்

    உயிர் ஊசல்

    நேருக்கு நேரான மோதலாக இருந்திருப்பின் இந்த 20 பேர் உயிரும் பலியாகி இருக்காது.. 4 பேரின் உயிர் இப்போது ஊசலாடி கொண்டிருக்காது.. அந்த மைனஸ் டிகிரி குளிர், ரத்தம் அதிகமாக வெளியேறினாலும் யாரும் காப்பாற்ற முடியாத நிலை.. ஆக்ஸிஜன் குறைவான இடம் அது.. இரும்பு கழியாலும், பாறைக் கற்களாலும் அடிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.

     பிஞ்சு குழந்தைகள்

    பிஞ்சு குழந்தைகள்

    வெறி பிடித்து அலையும் சீனாவுக்கு தக்க பதிலடியை இனியாவது இந்தியா தர வேண்டும்.. கணவனை இழந்த இளம்விதவைகளும் தந்தையை இழந்த பிஞ்சு குழந்தைகளும், மகன்களை இழந்த தாய்மார்களும் கதறி கொண்டிருக்கிறார்கள்.. இனியும் எந்த வல்லரசு நமக்கு தேவை என்ற ஆராய்ச்சி கூடாது. உலக அரங்கில் நம்மை வளரவே விட்டுவிடக்கூடாது என்பதுதான் சீனாவின் எண்ணம். அதை தற்போது வெளிப்படையாகவே அது காட்டி விட்டது. இனி நம்மைக் காப்பது நமது கைகளில்தான் உள்ளது.

    பதிலடி

    பதிலடி

    இனியும் இந்தியா பொறுமை காக்ககூடாது... இதுவரை உண்மையிலேயே என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்கு இன்னும் சரியாக தெரியவில்லை.. எத்தனை பேர் தாக்கப்பட்டனர் என்றும் உறுதியாக தெரியவில்லை.. இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் இதை தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.. அனைவரும் ஒருங்கிணைந்த கொரோனா வைரஸுடன் இந்த "சீன வைரஸையும்" சேர்த்து வெல்லும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

    English summary
    India china border: India should retaliate to China
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X