சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு புதிய கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் தேவை இல்லை- கார்த்தி சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவுக்கு புதியதாக கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் எதுவும் தேவை இல்லை என காங்கிரஸ் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கவும் அங்கு கோவில் கட்ட அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

India doesnt need any new temple, church, mosque, gurdwara, says Karti Chidambaram

மேலும் அயோத்தியில் மற்றொரு இடத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு புதிய கோவில், தேவாலயம், மசூதி மற்றும் குருத்வாரா அல்லது வழிபாட்டுத் தலம் தேவை இல்லை. ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு தலங்களை சீரமைத்து பாதுகாப்பதே போதுமானது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்குகள்.. அயோத்திக்கு 2வது இடம்இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்குகள்.. அயோத்திக்கு 2வது இடம்

English summary
Congress Loksabha MP Karti Chidambaram said that the country has enough places of worship which need restoration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X