சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றிய விஜயகாந்த்.. ஹெச்.ராஜா.. காயத்ரி ரகுராம்

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக மாநில தேசிய செயலாளர் ஹெச் ராஜா, நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கொரோனாவுக்கு எதிராக வீட்டின் முன் விளக்கு ஏற்றினர்.

Recommended Video

    நாடு முழுவதும் களைகட்டிய ஒற்றுமை தீபம்... பிரபலங்களும், தலைவர்களும் விளக்கேற்றினர்

    உலகையே காவு வாங்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் 4122 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 117 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 315 பேர் குணமடைந்துள்ளனர். 3690 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்துவந்தவர்கள், கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பல லட்சம் பேர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    India Fights Coronavirus: vijayakath , h raja, gayahthri raguram Lighting the lamp

    இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிரான குரலை வெளிப்படுத்தும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் இரவு 9 மணி அளவில் 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி சொன்னார். இதையடுத்து மோடியின் வலியுறுத்தலை ஏற்று நாடு முழுவதும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் 9 நிமிடம் விளக்குகளை ஏற்றியும், செல்போனில் டாரச் லைட் வெளிச்சத்தை அடித்தும் கொரோனாவுக்கு எதிரான குரலை பதிவு செய்தனர்.

    India Fights Coronavirus: vijayakath , h raja, gayahthri raguram Lighting the lamp

    அந்த வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வீட்டின் வெளியே விளக்கு ஏற்றினார். இதேபோல் பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தீபம் ஏற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கொரோனாவுக்கு எதிரான தனது குரலை பதிவு செய்தார்- தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து விளக்கு ஏற்றினார்.

    India Fights Coronavirus: vijayakath , h raja, gayahthri raguram Lighting the lamp

    English summary
    India Fights Coronavirus: dmdk leader vijayakath , bjp leader h raja, actress gayahthri raguram Lighting the lamp
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X