சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி கொள்முதலில் இந்தியா மெத்தனம்.. 16.5 மில்லியனுக்குத்தான் ஆர்டர். அதுவும் ரொம்ப லேட்

Google Oneindia Tamil News

சென்னை: 2020 ஆகஸ்ட் மாதத்திற்குள், மொத்தம், 80 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் 850 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்தன.

இதற்கு மாறாக, 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, 2021ம் ஆண்டு ஜனவரி வரை,வெறும் 16.5 மில்லியன் தடுப்பூசிகளுக்கு முதல் ஆர்டர் வழங்கியுள்ளது.

India placed the first order for just 16.5 million vaccines by January 2021

இதற்கான பட்டியலை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதை திமுக எம்பி. செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கடந்த வருடம் மே மாதமே பிரிட்டன் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்திடமிருந்து 90 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் செய்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம், ஃபைசர் நிறுவனத்திடமிருந்து 30 மில்லியன் டோஸ், ஆகஸ்ட் மாதம் ஜான்சன் நிறுவனத்திடமிருந்து 30 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவோ ஜூலை மாதம் நோவாவேக்ஸ், ஃபைசர்களிடம் தலா 100 மில்லியன் டோஸ், ஜான்சனிடமிருந்தும், மோடமாவிடமிருந்தும் ஆகஸ்ட் மாதம் தலா 100 மில்லியன் டோஸ் கொள்முதல் செய்துள்ளது.

ஜப்பான் கடந்த ஜூலையில் பைசரிடமிருந்து 120 மில்லியன் டோஸ் ஆர்டர் கொடுத்துள்ளது. ஆனால் இந்தியா, 2021 ஜனவரி மாதம், சீரம் இன்ஸ்ட்டிடியூட்டிடமிருந்து, கோவிஷீல்டுக்கு 11 மில்லியன் டோஸ் ஆர்டர் செய்துள்ளது. ஜனவரி மாதம்தான், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவேக்சின் மருந்தை 5.5 மில்லியன் டோஸ் ஆர்டர் செய்துள்ளது. இவ்வாறு அந்த செய்தித்தாள் புள்ளி விவரம் கூறுகிறது.

அமெரிக்காவின் டூக் குளோபல் ஹெல்த் இன்னோவேஷன் சென்டர் புள்ளி விவர அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது அந்த நாளிதழ். இப்படித்தான், இந்தியா கொரோனா தடுப்பூசி கொள்முதலில் தடுமாறி, இப்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது என்று நாளிதழ் செய்தி சுட்டிக் காட்டுகிறது.

English summary
By August 2020, the United States, the United Kingdom and the European Union, with a population of 80 million, had ordered 850 million corona vaccines. In contrast, India, with a population of 130 crore, has placed the first order for just 16.5 million vaccines by January 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X