சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்ல முன்னேற்றம் .. 30 மடங்கு அதிகரித்த ஆன்லைன் மருத்துவம்.. இதுதான் காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொடர்பான அறிகுறிகளுக்கான ஆன்லைன் மருத்துவர் ஆலோசனை இந்தியாவில் 30 மடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மற்றும் அடுத்தடுத்த லாக்டவுன் காரணமாக மருத்துவ ஆலோசனைகளை தேடுவதற்கான முதன்மை முறையாக டெலிமெடிசினைத் தேர்ந்தெடுப்பதில் அதிகமான மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய் 25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய்

கொரோனாவின் இரண்டாவது பேரழிவின் போது மிகப்பெரிய அளவில் தொற்று எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையையும் இந்தியா கண்டது. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறை ஏற்பட்டது.

ஏன் அவசியம்

ஏன் அவசியம்

அதாவது மருத்துவ உள்கட்டமைப்பை உடனே மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . அதேநேரத்தில் இந்த கட்டத்தில்தான், டெலிமெடிசின் சேவை மக்களின் கைகளுக்கு சென்றது. அதாவது நோயாளிகளை மருத்துவர்களுடன் தொலைவிலிருந்து இணைத்தது. நோயாளிகள் கவனிப்பு முறையையே மாற்றியது. இதன் காரணமாக மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளின் சுமையையும் குறைந்தது. எல்லோரும் மருத்துவமனைக்கு வந்து குவிவதை குறைத்தது.

கொரோனா 2வது அலை

கொரோனா 2வது அலை

இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த சுகாதார நிறுவனமான பிராக்டோவின் அறிக்கைப்படி, இந்தியர்கள் கொரோனாஇரண்டாவது அலையின் போது (ஏப்ரல்-மே 2021) 10 மடங்கு அதிகமாக மருத்துவர்களைக் கலந்தாலோசித்ததாகக் கூறுகிறது.

 நுரையீரல்

நுரையீரல்

அனைத்து ஆன்லைன் ஆலோசனைகளிலும் 50% க்கும் அதிகமானவை கொரோனா வைரஸ் மற்றும் பருவகால காய்ச்சல் தொடர்பான கேள்விகளாக இருந்தது. அதாவது நுரையீரல் மற்றும் பொது மருத்துவரை அதிகம் தேடியிருக்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பிற முக்கிய மருத்துவம் என்று பார்த்தால் மகளிர் மருத்துவம் (10%), தோல் நோய் (8%), குழந்தை மருத்துவம் (5%) ஆகியவை அடங்கும்.

இளம் வயதினர் ஆர்வம்

இளம் வயதினர் ஆர்வம்

கொரோனா இரண்டாவது அலையின் போது பொது மருத்துவர்கள் மற்றும் நுரையீரல் நிபுணர்களுக்கான தேவை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது .. இதற்கான ஆன்லைன் ஆலோசனைகள் ஏப்ரல் மற்றும் மே 2021 க்கு இடையில் 30 மடங்கு அதிகரித்து. 50% இளம் இந்தியர்கள் அதிக அளவில் கேள்விகள் எழுப்பினார்கள். 21-30 வயதிற்குட்பட்டவர்கள் ஒட்டுமொத்த ஆன்லைன் ஆலோசனைகளில் 50%, ஆகும். 31 முதல் 40 வயது வரை 22% மற்றும் மூத்த குடிமக்கள் 13% சதவீதம் பேர் கேள்விகள் கேட்டுள்ளனர்.

இரவு ஆலோசனை உயர்வு

இரவு ஆலோசனை உயர்வு

தங்களுக்கோ அல்லது அவர்களது அன்புக்குரியவர்களுக்கோ, கோவிட் -19 தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பற்றி அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் அடங்கும். மேலும் COVID-19 தடுப்பூசிகளைப் பற்றிய சந்தேகங்களும், அதனுடன் தொடர்புடைய ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல் வலி போன்ற பக்கவிளைவுகளும் இதில் அடங்கும். இரவு நேர ஆலோசனைகளில் 2 மடங்கு அதிகரிப்பு இருந்தது

பெண்கள் அதிகம்

பெண்கள் அதிகம்

ஏப்ரல்-மே 2021 காலகட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சுமார் 30% ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கடைசி உச்சத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த அலையின் போது மருத்துவர்கள் 3மடங்கு கூடுதல் ஆலோசனைகளை செய்துள்ளனர். முதல் அலையுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே ஆன்லைன் ஆலோசனை 10% அதிகரித்துள்ளது. ஆன்லைன் மருத்துவ ஆலோசனை கேட்டவர்களில் 35% பெண்கள் ஆவர்.

 மெட்ரோ நகரங்கள்

மெட்ரோ நகரங்கள்

கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைகள் 9 மடங்கு வளர்ச்சி மெட்ரோ நகரங்களில் இருந்துள்ளது. பெங்களூரு, டெல்லி-என்.சி.ஆர், மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசனை கேட்டதில் 46% பங்கைக் கொண்டுள்ளன. ஜெய்ப்பூர், லக்னோ, போபால், கான்பூர், சண்டிகர் போன்ற நகரங்கள் அதிகபட்ச எண்ணிக்கையிலான ஆலோசனைகளுடன் முன்னிலை வகித்தன. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள் அதிகம் வந்திருப்பது தொழில்நுட்பத்தில் புதுமையானது என்றாலும், பயம், பதட்டம், சாதாரண பிரச்சனைகளுக்கு இனி மருத்துவர்களை போய் நாடாமல் ஆன்லைனிலேயே ஆலோசனை பெற முடியும் என்கிற நிலையை ஆன்லைன் மருத்துவம் உருவாக்கி உள்ளது.

English summary
India saw record numbers of positive cases and deaths during the devastating second wave of COVID-19. Shortage of hospital beds and oxygen supply pointed towards an overwhelmed healthcare system that was in need of services that will help expand the efficiency of the existing infrastructure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X