சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை, பெங்களூர், மும்பை.. உலகில் வேகமாக வளரும் சிட்டி எது? ஆக்ஸ்போர்டின் அறிக்கையில் ஆச்சர்யம்!

உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உலகின் வேகமாக வளரும் நகரம் எது தெரியுமா?- வீடியோ

    சென்னை: உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

    உலகம் முழுக்க தற்போது நகரங்களில் உருவாகும் புதிய நிறுவனங்கள் , வேலை வாய்ப்பு, மக்கள் தொகை, பணிசூழல் ஆகியவற்றை வைத்து இந்த ஆக்ஸ்போர்ட் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. உலகம் முழுக்க இருக்கும் அனைத்து நகரங்களும் இதில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.

    இதில் இந்தியாவிற்கு பல ஆச்சர்யமான முடிவுகள் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    எல்லாமே

    எல்லாமே

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்கள்தான் உள்ளது. இந்திய நகரங்கள்தான் 2030களில் பெரிய வளர்ந்த நகரங்களாக இருக்கும் என்று கூறியுள்ளது. முதல் 10 இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்களாக இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முதல் ஐந்து

    முதல் ஐந்து

    இதில் முதல் இடத்தில் வைர வியாபாரம் செழித்து வளரும் சூரத் நகரம் இருக்கிறது. சூரத் 2030ல் பெரிய வளர்ச்சியை சந்தித்து இருக்கும் என்கிறார்கள். அடுத்த இடத்தை ஆக்ரா பிடித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.

    திருப்பூர் ஆச்சர்யம்

    திருப்பூர் ஆச்சர்யம்

    இதில் தமிழகம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பட்டியலில் 6வது இடத்தில் திருப்பூர் இருக்கிறது. உலகிலேயே 6 வது பெரிய வேகமாக வளரும் நகரம் திருப்பூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னலாடை புரட்சி மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

    சென்னை எங்கு

    சென்னை எங்கு

    7வது இடத்தில் ராஜ்கோட் உள்ளது. உலகிலேயே வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 8வது இடத்தில் திருச்சி உள்ளது. சென்னை 9வது இடத்தில் உள்ளது. விஜயவாடா பத்தாவது இடத்தை பிடித்து இருக்கிறது.

    அட சூப்பர்

    அட சூப்பர்

    உலகில் உள்ள சில முக்கிய நகரங்கள் கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், டோக்கியோ, பெய்ஜிங், லண்டன், ஆகியவை கூட 10 இடங்களுக்கு பின்தான் வந்துள்ளது. இதனால் 2030ல் இந்தியா பெரிய வளர்ச்சியை சந்தித்து இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    English summary
    India shocks the whole world by claims all top ten of world's Fastest-Growing cities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X