அதிக கொரோனா டெஸ்ட்.. மகாராஷ்டிராவை மிஞ்சியது தமிழகம்.. அதிரடி வேகம்.. குணமடைவதிலும் டாப்!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான அதிக சோதனையில் தமிழகம் முதல்இடத்தில் உள்ளது. குறைவான உயிரிழப்பு என்ற பிரிவிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது. குணப்படுத்துவதில் கேரளாவும் முதல் இடத்தில் உள்ளன. மாநிலவாரியான விவரத்தை பார்ப்போம்.
கொரோனா பெருந்தொற்று தாக்கும் வேகமும், அதனால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களும் எல்லோருக்குமே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் தற்போதைய நிலையில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் மக்கள் பாதிப்பதை தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து குணப்படுத்துவதிலும் , உயிரிழப்பை தடுக்கவும் இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசுகளும் விரைந்து செயல்பட்டு வருகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது தமிழகம் தான்.
காவல் உதவி ஆணையருக்கு கொரோனா... கலக்கத்தில் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள்

அதிக சோதனையில் முதலிடம்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 188241 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 4829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சோதனையில் வெறும் 2.6 சதவீதம் தான்- இதேபோல் நாட்டிலேயே இந்தியாவில் தான் கொரோனாவால் உயிழப்போரின் சதவீதம் மிககுறைவு ஆகும். தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்ட்ட 4829 பேரில் வெறும் 35 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அவர்களில் பலர் உடல் பாதைகளால் பாதிக்கப்பட்வர்கள் ஆவர். உயிரிழப்பு சதவீதம் என்பது 0.72 சதவீதம் ஆகும். தமிழகத்தில் இதுவரை 1516 பேர் குணம் அடைந்துள்ளனர். இது 31.39 சதவீதம் ஆகும். இந்தியாவிலேயே அதிகம் பேரை தினமும் சோதிப்பதால் தான் அதிக பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா முதலிடம்
தமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிகம்பேரை சோதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா. இங்கு 181746 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 16758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே அதிகமான அளவாக 9.2 சதவீதம் ஆகும். நாட்டிலேயே அதிக பாதிப்பை சந்தித்துள்ள மகாராஷ்டிராவில் தான் மரணமும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதுவரை 651 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இது 3.88 சதவீதம் ஆகும். மகாராஷ்டிராவில் 3094 பேர் குணம் அடைந்துள்ளனர். இது 18.46 சதவீதம் ஆகும்.

3வது இடத்தில் ஆந்திரா
இந்தியாவிலேயேஅதிகம் பேரை சோதனை செய்த மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா 3வது இடத்தில் உள்ளது. இங்கு 141274 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 17777 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 1.3 சதவீதம் ஆகும். ஆந்திராவில் கொரோனாவால் 36 பேர் இறந்துள்ளனர். இது 2.03 சதவீதம் ஆகும். இதுவரை அங்கு 1012 பேர் குணமாகி உள்ளனர். இது 56.95 சதவீதம் ஆகும்.

குணப்படுத்தும் வேகம்
தமிழகத்தின் மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகா அதிகம் மக்களை சோதனை செய்த மாநிலங்களின் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இங்கு 88777 பேர் இதுவரை சோதிக்கப்பட்டதில் 693 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் குணப்படுத்தும் வேகம் என்பது 51.08 சதவீதமாக உள்ளது. இங்கு 354 பேர் குணம் அடைந்துள்ளனர்.

குணப்படுத்துவதில் முதலிடம்
தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளாதான் இந்தியாவிலேயே குணப்படுத்துவதில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் ஆகும் 93.24 சதவீதம் பேர் அதாவது 469 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பை குறைத்ததில் முதலிடத்தில் கேரளா உள்ளது. கொரோனா அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாதிப்பு உள்ளது. இதுவரை கேரளாவில் 34599 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 503 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் கடைசி
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு சதவீதம் என்பது ஒடிசாவில் தான் மிக குறைவாக உள்ளது. அங்கு இதுவரை 47454 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் வெறும் 205 பேருக்குத்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 0.4 சதவீதம் ஆகும். இதுவரை 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.நாட்டிலேயே பஞ்சாபில்தான் குணப்படுத்தும் வேகம் என்பது மிககுறைவு ஆகும். அங்கு 1526 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 135 பேர் மட்டுமே குணமாகி உள்ளனர். இது வெறும் 8.85 சதவீதம் ஆகும்

அதிகம் பேர் மரணம்
நாட்டிலேயே கொரோனாவால் அதிக மரண விகிதம் உள்ள மாநிலம் மேற்கு வங்காளம் அங்கு 9.89 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.அதாவது மொத்தமாக 1456 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது வரை 6625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 396பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதோ மேலே உள்ள பட்டியலில் பாருங்கள்