சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 மாதங்களில் எடப்பாடி அரசு குறித்த மக்கள் மனநிலையில் இத்தனை மாற்றங்களா?.. இந்தியா டுடே சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    கமல் பிரமாண்ட வளர்ச்சி, ஸ்டாலினுக்கு அடுத்த இடம்- வீடியோ

    சென்னை: தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து இந்தியா டுடே கருத்து கணிப்பில் எடப்பாடி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா டுடே , 'ஆக்சிஸ் மை இந்தியா' இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக 17 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

    இந்தியா டுடே சர்வே.. கமல் பிரமாண்ட வளர்ச்சி... ஸ்டாலினுக்கு அடுத்த இடம்.. ரஜினி செல்வாக்கை இழந்தார்!இந்தியா டுடே சர்வே.. கமல் பிரமாண்ட வளர்ச்சி... ஸ்டாலினுக்கு அடுத்த இடம்.. ரஜினி செல்வாக்கை இழந்தார்!

    தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என 57 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எடப்பாடியின் செயல்பாடுகள் பரவாயில்லை என 17 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஒன்றுமே புரியலைங்க என 9 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

    செயல்பாடுகள்

    செயல்பாடுகள்

    இது போன்ற ஒரு கருத்து கணிப்பை கடந்த அக்டோபர் 2018-இல் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியாவுடன் இணைந்து நடத்தியது. அப்போதும் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி என கேட்கப்பட்டது.

    3 சதவீதம்

    3 சதவீதம்

    அதற்கு திருப்திகரமாக உள்ளதாக 18 சதவீதம் பேர் கூறியுள்ளார். இந்த ஜனவரி எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் ஒரு சதவீதம் குறைந்துள்ளது. அதுபோல் திருப்தி இல்லை என்று 54 சதவீதம் பேர் கூறியிருந்தனர். இந்த எண்ணிக்கை ஜனவரியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 3 சதவீதம் கூடியுள்ளது.

    3 சதவீதம்

    3 சதவீதம்

    அதுபோல் எடப்பாடியின் செயல்பாடுகள் பரவாயில்லை என கடந்த அக்டோபர் மாதம் 16 சதவீதம் பேர் கூறியிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கையும் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒன்றுமே புரியலைங்க என கடந்த அக்டோபர் மாதம் 12 சதவீதம் பேர் கூறியிருந்தனர். அந்த எண்ணிக்கையில் இந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் 3 சதவீதம் குறைந்துள்ளது.

    வெறுப்பு

    வெறுப்பு

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பொறுப்பேற்ற அதிமுக அரசின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவின் விரோத திட்டங்களுக்கு துணை போனதே மக்களுக்கு வெறுப்பு ஏற்பட காரணமாயிற்று என கருதப்படுகிறது. நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, 8 வழிச்சாலை ஆகியன முக்கிய பிரச்சினைகளாக கருதப்படுகிறது.

    English summary
    India today survey states that the Tamilnadu government's performance dissatisfactory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X