சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?- கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட கேப்டன்... ஒரு பரபரப்பு சர்வே

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?- ஒரு பரபரப்பு சர்வே- வீடியோ

    சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்பது குறித்து இந்தியா டுடே ஒரு பரபரப்பு சர்வேயை தமிழகத்தில் எடுத்துள்ளது.

    ஜெயலலிதா, கருணாநிதியை அடுத்து தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன், நான் வருகிறேன் என பலர் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள். எனினும் தமிழகத்தில் வெற்றிடம் ஒன்று ஏற்படவே இல்லை. நாங்கள் இருக்கிறோம் என ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி கூறிவருகிறது.

    இந்நிலையில் 18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனர். அவ்வாறு செய்யும் பட்சத்தில் தகுதி நீக்கம் செல்லும் என்றாலும் செல்லாது என்றாலும் அதிமுக அரசுக்கு பிரச்சினை. செல்லும் என்றால் 20 தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக தலையெடுக்குமா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. இந்நிலையில் தமிழக மக்களின் நாடித் துடிப்பை இந்தியா டுடே பார்த்துள்ளது.

    ரஜினிகாந்த்தைவிட கமல்ஹாசனுக்கே மக்கள் ஆதரவு அதிகம்.. இந்தியா டுடே சர்வே ரஜினிகாந்த்தைவிட கமல்ஹாசனுக்கே மக்கள் ஆதரவு அதிகம்.. இந்தியா டுடே சர்வே

    விஜயகாந்த்துக்கு இந்த தீர்ப்பா

    விஜயகாந்த்துக்கு இந்த தீர்ப்பா

    கடந்த 2005-ஆம் ஆண்டு கட்சியை தொடங்கி 2006 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற விஜயகாந்த் முதல்வராக வர வேண்டும் என 5 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இவரை கடைசி இடத்துக்கு தள்ளியுள்ளனர்.

    கட்சியே தொடங்கவில்லை

    கட்சியே தொடங்கவில்லை

    கட்சியே தொடங்காத ரஜினி முதல்வராக வர வேண்டும் என்று 6 சதவீதம் மக்கள் விரும்புகின்றனர். இவர் என்னதான் தமிழக மக்களுக்கு பரீட்சயமானவர் என்ற போதிலும் இத்தனை சதவீதம் பேரே இவரை விரும்புகின்றனர். அதேபோல் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் முதல்வராக வர வேண்டும் என 6 சதவீத மக்கள் விரும்புகின்றனர்.

    முன்னேறிய அன்புமணி

    மாற்றம் முன்னேற்றம் என்பதை வலியுறுத்தும் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வரவேண்டும் என 7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்புமணியும் தனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் இந்த தமிழகத்தை மாற்றி காட்டுகிறேன் என கோரி வருகிறார்.

    கமல் கட்சி

    கமல் கட்சி

    விஜயகாந்த், ரஜினிகாந்த், தினகரன், ஓபிஎஸ், அன்புமணி ஆகியோரை கமல்ஹாசன் முந்தி சென்றுள்ளார். இதற்கு காரணம் கட்சி தொடங்கிவிட்டு அமைதியாக இருக்காமல் சுற்றுப்பயணம் சென்று மக்களின் குறைகளை கேட்டு அறிகிறார். இதனால் கமல் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு வந்துள்ளது.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவர் முதல்வராக வர வேண்டும் என 10 சதவீதம் பேர் விரும்புகின்றனர். அதிமுகவில் நடந்து வரும் குளறுபடிகள் மற்றும் மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பது ஆகியவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    மு க ஸ்டாலின்

    மு க ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் ஸ்டாலினுக்கு அதிக அளவில் ஆதரவளித்துள்ளனர். முதல்வராக கனவு கூட முடியாது என ஆளும் கட்சி விமர்சிக்கப்பட்ட நிலையில் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஸ்டாலின் பெற்றுள்ளார் என்றே கூறலாம்.

    English summary
    India today conducts a survey from TN people that who will be the next CM of Tamilnadu?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X