சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெ. மரணத்தால் அதிமுகவுக்கு பெரும் சரிவு... தேர்தல் முடிவுகளில் தெரியும்.. குண்டு போடும் இந்தியா டிவி

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்நாட்டில் யார் ஜெயிப்பா?.. இதாங்க இந்தியா டிவி கருத்து கணிப்பு!- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு காத்திருப்பதாக இந்தியா டிவி கருத்து கணிப்பு முடிவுகளிலிருந்து விளங்குகிறது.

    நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாகிவிட்டது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தயார் நிலையில் உள்ளன. எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகிவிட்டன. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரங்கள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் இல்லை இல்லை நாங்கள்தான் கெத்து என்றும் மாறி மாறி அதிமுக, திமுக கூட்டணிகள் கூறிவந்தன.

    லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. வெற்றி வியூகம் வகுக்கும் ஸ்டாலின்.. இன்று முக்கிய அறிவிப்பு லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. வெற்றி வியூகம் வகுக்கும் ஸ்டாலின்.. இன்று முக்கிய அறிவிப்பு

    இந்தியா டிவி கருத்து கணிப்பு

    இந்தியா டிவி கருத்து கணிப்பு

    இந்த நிலையில் இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் கருத்து கணிப்புகளை நடத்தியது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    வெற்றி பெறாது

    வெற்றி பெறாது

    இதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. திமுக 16 இடங்களிலும் , அதிமுக 12 இடங்களிலும் , அமமுக- பாமக தலா 2 இடங்களிலும் மற்ற கட்சிகள் ஒரு இடங்களிலும் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக வழக்கம் போல் இந்த தேர்தலிலும் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

    3-ஆவது பெரிய கட்சி

    3-ஆவது பெரிய கட்சி

    இது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்தே சிங்கம் போல் போட்டியிட்ட ஜெயலலிதா (அதிமுக) 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதனால் தேசிய அளவில் அதிமுக 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

    வேதனை

    வேதனை

    ஆனால் தற்போது வெளியான கருத்து கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும் போது இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி காத்திருப்பதாகவே கருதப்படுகிறது. தேசிய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுகவின் நிலைமை ஜெயலலிதா இறப்புக்கு பிறகு இத்தகைய அதலபாதாளத்துக்கு தள்ளப்படுவதை நினைக்கும் போது அக்கட்சியினர் வேதனை அடைந்துள்ளனர். அப்போ மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை. ஜெயலலிதாவின் முகத்துக்குத்தான் வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

    English summary
    India TV and CNX Opinion Poll says that there is a downfall for ADMK after the demise of Jayalalitha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X