சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: லாக்டவுனில் பல தளர்வுகள் இருந்தாலும், புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்கள் திரும்புவதால், தொழில் நிறுவனங்களில், பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

சமூக பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்காத அமைப்பு சாரா தொழிலாளர்களின் கையில் உள்ள கடைசி காசுவரை செலவு செய்துவிட்டு வறுமையில் வாடுகின்றனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளர்களை, பல்வேறு மாநில அரசுகள் பேருந்துகள் மூலம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றன. பலரும் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது.

ஒரே வருஷத்தில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு ஒரே வருஷத்தில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு

பற்றாக்குறை

பற்றாக்குறை

ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டாலும், சில கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதால், கட்டுமானம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

திரும்புவது குறையும்

திரும்புவது குறையும்

இது தொடர்பாக ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு துறைசார் நிபுணர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது, பொது முடக்கம் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் பொது முடக்கம் முடிந்தாலும், 40 சதவிகித தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு திரும்புவார்கள் என தெரிவித்ததாக அந்த ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது.

எந்த துறைகளுக்கு பாதிப்பு

எந்த துறைகளுக்கு பாதிப்பு

இதனால் கட்டுமானத் துறைக்கு 59 சதவிகிதம் அளவிற்கும், ரியல் எஸ்டேட் துறையில் 30 சதவிகிதம் அளவிற்கும், உற்பத்தி துறையில் 29 சதவீதம் அளவிற்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். கட்டுமான துறையில் பணிகள் வேகமாக நடந்தால்தான், பொருளாதார மந்த நிலை விரைவில் நீங்கும். ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை, அந்த துறையை அச்சுறுத்துகிறது.

Recommended Video

    Puducherry Migrants set Out On 1500 KM Cycle Journey To Odisha.
    வாகனத் துறை

    வாகனத் துறை

    மேலும், வாகனத் துறையில் 29 சதவிகிதம், உட்கட்டமைப்பு துறையில் 24%, ஜவுளித்துறையில் 22 சதவிகிதமும், வேளாண்துறையில் 17 சதவீதமும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் கணிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Although there are many relaxation in Lockdown, the return of migrant workers to their hometowns has led to a shortage of employees in the industry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X