சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பக்கம் கூண்டில் சிதம்பரம்.. இன்னொரு பக்கம் நிர்மலாவின் அதிரடி.. இது இந்தியன் வங்கியின் கதை!

இந்தியன் வங்கி அலகாபாத் வங்கியுடன் இணையும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா சீதாராமன் அதிரடி | Nirmala Sitharaman Pressmeet

    சென்னை: காலம் எவ்வளவு விசித்திரமானது.. அதன் முகங்கள்தான் எத்தனை எத்தனை.. ஒரு பக்கம் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக் கூண்டில் ப.சிதம்பரம் நின்றுகொண்டிருக்கிறார்.. இன்னொரு பக்கம் ப.சிதம்பரத்தின் தாத்தாவால் நிறுவப்பட்ட இந்தியன் வங்கியானது, அலகாபாத் வங்கியுடன் இணைக்கும் செயல் அரங்கேறி வருகிறது.

    நாளுக்கு நாள் நெருக்கடியில் சிக்கி வருகிறார் ப.சிதம்பரம். சுமத்தப்பட்டுள்ளதோ ஊழல் குற்றச்சாட்டு.. அரசியல்வாதிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டு என்பது இயல்பான ஒன்று என்றாலும், ப.சிதம்பரம் ஏன் ஊழல் செய்ய வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

    Indian Bank: Nirmala Sitharaman and P Chidamabram

    இதற்கு காரணம், இவருடைய முன்னோர்கள்தான். 20 ஆண்டுகள் மத்திய அமைச்சர், 27 ஆண்டுகள் எம்பி, 9 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்பதையும் தாண்டி, சிதம்பரத்துக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ரொம்பவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்.

    இவரது தாய்வழி தாத்தா செட்டிநாட்டு அரசர் அண்ணாமலை செட்டியார். இவரது அண்ணன் ராமசாமி செட்டியார். இவர்தான் இந்தியன் வங்கி நிறுவனர்களில் ஒருவர். இந்தியன் வங்கிய இவரும் கிருஷ்ணசாமி ஐயர் என்பவரும் இணைந்து உருவாக்கினர். அதன் முதல் இயக்குநர்கள் இவர்கள்தான். பின்னர் இந்தியன் வங்கி இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்டது.

    வங்கிகளை இணைப்பதால், ஊழியர்கள் வேலை இழப்பார்களா? நிர்மலா சீதாராமன் விளக்கம்வங்கிகளை இணைப்பதால், ஊழியர்கள் வேலை இழப்பார்களா? நிர்மலா சீதாராமன் விளக்கம்

    இன்று ஆளும் பாஜக தரப்பு.. சிதம்பரத்தை ஊழல் புரிந்தமைக்காக சுழட்டியடித்து, விரட்டி பிடித்து நெருக்கடி தந்து வருகிறது. இன்றுகூட இந்த கேஸ் விஷயமாக கோர்ட்டுக்கு வந்து போனார் சிதம்பரம். இப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் அதே சமயம்தான், சிதம்பரத்தின் தாத்தா உருவாக்கிய இந்தியன் வங்கியை அலகாபாத் வங்கியுடன் இணைப்பதற்காக உத்தரவை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இந்த விந்தையை நாம் எப்படி பார்ப்பது?!

    English summary
    Finance Minister Nirmala sitharaman has announced that Indian Bank to be merged
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X