சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. ரெட் அலர்ட் பகுதிகளில் விரைவாக இதை செய்தால்.. ரொம்ப நல்லது!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவின் 3 ஆவது நிலையை அதாவது சமூக பரவலை தடுக்க ஹாட்ஸ்பாட் இடங்களில் மத்திய மாநில அரசுகள் ரேண்டமாக கொரோனா பரிசோதனைகளை அதிகமாக செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Recommended Video

    உயிர்காக்கும் மருத்துவர்களுக்கே இதான் நிலைமை

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. கடந்த 3 , 4 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது.

    இதனால் தமிழகத்தில் விரைவில் கொரோனா இல்லாத நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

    ஊரடங்கு தளர்வால் மே இறுதியில் செகண்ட் வேவ்க்கு தயாராகும் இந்தியா! ஊரடங்கு தளர்வால் மே இறுதியில் செகண்ட் வேவ்க்கு தயாராகும் இந்தியா!

    17 ஆயிரம்

    17 ஆயிரம்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. அது போல் பலி எண்ணிக்கை 550ஐ நெருங்கியது.

    கொரோனா

    கொரோனா

    இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் உலக அளவில் அதிகம் பாதித்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இந்தியாவில்தான் என கூறப்படுகிறது. இதை அமெரிக்க அதிபர் டிரம்பும் குத்திக் காட்டி பேசியுள்ளார்.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே இந்தியாவில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் போதே அந்த நிலை என்றால் மே 3 க்கு பிறகு பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் நிலைமை என்னவாகும்?

    ஹாட்ஸ்பாட்

    ஹாட்ஸ்பாட்

    இதனால் சமூக பரவல் நிலைக்கு நாம் சென்றுவிட்டோமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதை தெரிந்து கொள்ள அதிக பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே சமூகப் பரவல் இருக்கிறதா என தெரிந்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் ஹாட்ஸ்பாட் என கண்டறியப்பட்ட இடங்களிலும் ரேண்டமாக பரிசோதனை செய்ய வேண்டும். இதைத்தான் WHO வலியுறுத்துகிறது.

    கருவிகள்

    கருவிகள்

    பரிசோதனை செய்யும் கருவிகளை கூடுதலாக வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனையை அதிகப்படுத்தாமல் ஊரடங்கை திரும்ப பெறுவது என்பது மிகப் பெரும் ஆபத்தை கொடுக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.

    English summary
    Indian government has to do this to stop Corona's 3rd stage. Testing should be conducted for more and more.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X