சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேனில் குடை.. தலைக்கு மேல் கூரை.. 5 நிமிஷம் வெயில்ல இருக்க முடியாதா.. நம்ம தலைவர்களை நினைச்சா!

அரசியல் தலைவர்கள் குளுகுளு வேன்களிலேயே பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: "ஏன் வெயில்ல கொஞ்ச நேரம்கூட நிற்க முடியாதோ.. வர்றதே 5 வருஷத்துக்கு ஒருமுறை.. அதிலயும் 5 நிமிஷம்கூட வெயில்ல நிக்க முடியாட்டி எப்படி" என்று பொதுமக்கள் அரசியல் தலைவர்களை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீப காலமாக ஒரு கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கி உள்ளது. அது வேன் கலாச்சாரம்.. ஜெயலலிதாதான் இதை முதலில் ஆரம்பித்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

அவருக்கு மூட்டு வலி பிரச்சனை உள்ளிட்ட பல தொந்தரவுகள் உடலில் இருந்தன. அதேபோல வயது மூப்பு காரணமாக கருணாநிதியும் பிரச்சார சொகுசு வேனை பயன்படுத்தினார். இவர்கள் இருவரையும்கூட வயது, உடல்கோளாறு வைத்து ஒரு கணக்கில் சேர்த்து கொள்ளலாம்.

திருச்சியில் சிக்கிய ரூ. 2 கோடி பணம்.. திருமா, ஸ்டாலினை சீண்ட பாஜக போட்ட கார்ட்டூன் திருச்சியில் சிக்கிய ரூ. 2 கோடி பணம்.. திருமா, ஸ்டாலினை சீண்ட பாஜக போட்ட கார்ட்டூன்

மேலே, கீழே போகுது

மேலே, கீழே போகுது

ஆனால் இப்போது உடம்பு நன்றாக இருக்கக்கூடிய தலைவர்களே இந்த வேனில் வருவதுதான் ஆச்சரியம்! அதுவும் அது சாதாரண வேன் கிடையாது.. குளுகுளு வேன்.. குறைந்தது 10, 12 பேர் உள்ளே உட்காரலாம்.. வேட்பாளர் உட்காரும் சேர், முன்னாடி சுத்துது, மேல எழுது.. கீழே போகுது.. ஹைட்ராலிக் லிப்ட் என்று சொல்கிறார்கள்.

வாயை பிளக்கிறார்கள்

வாயை பிளக்கிறார்கள்

இதுல கட்டில், மெத்தை, டிரஸ்ஸிங் டேபிள், வெஸ்டன் மாடல் கழிவறை, குளியலறை, மைக்ராவேவ் ஓவன், இப்படி சில வேனில் இருக்கிறதாம். இதையெல்லாம் போய் யார் பார்த்தது? பார்க்கறதுதான் நமக்கு வேலையா என்ன? பிரச்சாரம் செய்ய வருபவர்களையே 'ஆ'வென வாயை பிளந்து பார்க்கும்போது, இந்த வேனை பற்றி யார் யோசித்து கொண்டிருப்பார்கள்.

ஹேமமாலினி

ஹேமமாலினி

அதிலும் நடிகை ஹேமமாலினி ஒரு வேனில் வருகிறார். ஏற்கனவே மேற்கூறிய சகல வசதியும் உள்ள வேன்தான் அது.. பிரச்சாரத்தில் பேசப்போவது என்னவோ 5 நிமிஷம்தான்.. இந்த 5 நிமிஷமும் அவரால் வெயிலில் நிற்க முடியவில்லை. அவருக்கு ஒருவர் குடை பிடித்து கொண்டு நிற்கிறார். சம்பளம் தந்தே இதுக்கு ஒரு ஆளை பிடித்து வைத்திருக்கிறார். இது போதாதென்று ஒரு கூலிங் கிளாஸ் வேறு!

குளுகுளு

குளுகுளு

ஹேமமாலினிக்காவது குடை பிடிக்க ஒருத்தர் இருந்தார்... காங்கிரஸின் சசிதரூர் வேற லெவல்!! இவர் டாப்பில் ஒரு பளபள கூரையே ரெடி செய்துவிட்டார். அது பார்க்கறதுக்கு சின்ன ஷாமியானா போல இருக்கிறது. பிரச்சனையே இல்லை.. உள்ளேயும் குளுகுளு.. வெளியேயும் குளுகுளு.. டாப்பில் அந்த கூரையில் ஒரு "கை" முளைத்துள்ளது.

ஜெ. தீபா

ஜெ. தீபா

இப்படித்தான் நம்ம ஊரிலும் அன்று ஜெ. தீபா பிரச்சாரம் செய்தார். கொஞ்ச நேரம்தான் வெயில்ல நின்றிருப்பார்..
ஆனால் வெயிலை பொறுக்க முடியாமல் பின்னால் வந்து கொண்டிருந்த தனது ஏசி காருக்குள் போய் உட்கார்ந்து கொண்டார். அது மட்டுமில்லை.. அவரது காரின் கதவுகளின் கண்ணாடிகளையும் மூடிக்கொண்டார். அவருக்கு பதிலாக அவரது ஆதரவாளர்கள் வாக்கு சேகரிக்க.. தீபாவுக்காக காலையில் இருந்து மண்டை பிளக்கும் வெயிலில் நின்றிருந்த மக்களின் கதி அமோகதிதான்!

முக்கிய கேள்வியே

முக்கிய கேள்வியே

ஆக... 5 நிமிஷம்கூட வெயிலை பொறுத்து கொள்ள முடியாத இந்த தலைவர்களை வைத்து கொண்டும், இவர்களை தேர்ந்தெடுத்தும் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் நாட்டுக்கு பிரதானமான, மிக முக்கியமான கேள்வியே!

English summary
All the Political leaders are laughing on the luxury Campaign Vehicle is being criticized on the Social media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X