சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. கோவை, பெங்களூரிலிருந்து சென்னை இயக்கப்படும் ரயில்கள் உட்பட 168 ரயில்கள் ரத்து

Google Oneindia Tamil News

சென்னை: சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள் உட்பட 168 ரயில்கள் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    முடங்கியது சென்னை... வெறிச்சோடியது சாலைகள்...

    முக்கியமான வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு இயங்கக்கூடிய ரயில்கள் இவற்றில் பெரும்பாலானவை என்று தெரிகிறது.

    Indian Railways has cancelled 168 trains

    இந்த ரயில்களில் முன்பதிவு செய்த 80 சதவீதத்துக்கும் அதிகமான பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை வாபஸ் பெற்றுக்கொண்டனர். வெறும் 20% பயணிகளுக்காக இந்த ரயில்களை இயக்க முடியாது என்பதால் ரயில்வேத்துறை இதை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை தவிர்க்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. அதை ஏற்று பொதுமக்களும் பொதுப்போக்குவரத்தை குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த ஒரு பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனிடையே, ரயில்வேதுறை இன்று 168 ரயில்கள் ரத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவை-சென்னை சதாப்தி (ரயில் எண் 12244), சென்னை-விஜயவாடா நடுவேயான ஜன் சதாப்தி (12077), பெங்களூர்-சென்னை சென்டிரல் இடையேயான, டபுள் டெக் ரயில் (22626) ஆகியவையும் ரத்து செய்யப்பட்ட பட்டியலில் உள்ளது.

    எந்தெந்த ரயில்கள் ரத்தாகியுள்ளது, என்பதை மேற்கண்ட புகைப்படத்தில் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

    பொது மக்களை ஏற்றிச் செல்லக்கூடிய ரயில்கள்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய ரயில் போக்குவரத்து எந்த ஒரு பிரச்சனையும் இன்றி செயல்பட்டு வருகிறது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

    English summary
    Indian Railways has cancelled 168 trains due to low occupancy in view of COVID19, from 20th March to 31st March.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X