சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறிமுகமாகிறது உபயோக கட்டணம்.. உயர்கிறது ரயில் டிக்கெட் விலை

Google Oneindia Tamil News

சென்னை: ரயில் சேவை மறுபடியும் ஆரம்பிக்க உள்ள நிலையில், நாட்டில் ரயில் பயணிகள் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இடையே மற்றொரு அடியாக இது பார்க்கப்படுகிறது.

ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்குவதில் கவனம் செலுத்தி வருவதாக கூறி வருகிறது.

Indian Railways News: Train travel likely to become expensive soon

இந்தநிலையில்தான், ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த உபயோக கட்டணத்தை விதிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் விரைவில் வசூலிக்கப்பட உள்ளது. இதனால் ரயில் டிக்கெட் கட்டணம் உயர உள்ளது.

இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் கூறியதாவது: முக்கிய ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த சிறிய அளவுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இது உதவும் என்று நம்புகிறோம்.

இனி பெரிய ரயில் நிலையங்களில்.. ரயில் ஏற போறீங்களா.. அதிர வைக்கும் ரயில்வேயின் திட்டம்! இனி பெரிய ரயில் நிலையங்களில்.. ரயில் ஏற போறீங்களா.. அதிர வைக்கும் ரயில்வேயின் திட்டம்!

ரயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படும். நிலையம் முழுவதும் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்க இது உதவும். இந்த கட்டணம் மிக குறைந்த அளவில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய ரயில்வே துறையில் 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் 10 முதல் 15 சதவீத ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் விதிக்கப்பட உள்ளது. 300 முதல் 1000 நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Train travel is likely to become expensive in forthcoming days as passengers have to pay an additional ‘user fee’ in addition to the train fares at some major stations with high footfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X