சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி முடிவானது.. 1 தொகுதி ஒதுக்கீடு!

லோக்சபா தேர்தலுக்காக திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலுக்காக திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கட்சி இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகம் காட்டி வருகிறது. அதிமுக முதலில் வேகமாக தொடங்கினாலும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க முடியாமல் திணறி வருகிறது.

Indian Union Muslim League alliances with DMK: Will play in 1 seat

அதே சமயம் திமுகவும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலுக்காக திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டு இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக தலைவர் காதர் மொய்தீன், திமுக தலைவர் ஸ்டாலின் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காதர் மொய்தீன், கூட்டணி இறுதியானது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது சந்தோசம். இதை ஏற்றுக்கொள்கிறோம். திமுக கூட்டணிக்கு நாங்கள் வலு சேர்ப்போம் என்று கூறியுள்ளார்.

திமுக இன்னும் சில மணி நேரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Indian Union Muslim League alliances with DMK: Will contest in 1 Lok Sabha seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X