சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#RepublicDay2020 தேசமெங்கும் உற்சாகம்.. குடியரசு தினத்தை பெருமையுடன் கொண்டாடும் இந்தியர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamil Nadu showcases Gramiya kalai(Folk Arts) of Tamil People | republic day celebration in Delhi

    சென்னை: குமரி முதல் டெல்லி வரை தேசமெங்கும் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    வழக்கமான உற்சாகத்துடன் தேசியக் கொடி ஏற்றியும், நாடு குடியரசாக மாறியது எப்படி என்று விளக்கியும் மக்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.

    மாநிலத் தலைநகரங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட்டு முப்படையினர், காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டனர். அதேபோல டெல்லியும் விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் டிவிட்டரிலும் மக்கள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

    சென்னையில் குடியரசு தினவிழா.. தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் புரோகித்.. மெரினாவில் விழா கோலம்சென்னையில் குடியரசு தினவிழா.. தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் புரோகித்.. மெரினாவில் விழா கோலம்

    முதல் குடியரசு தின விழா

    டெல்லியில் 1950ம் ஆண்டு நடந்த முதல் குடியரசு தின விழா அணிவகுப்பை இவர் பகிர்ந்துள்ளார். முப்படையினர் அணிவகுத்து வரும் இந்தக் காட்சி பார்க்கவே பெருமிதமாக உள்ளது. அந்தக் காலத்து கருப்பு வெள்ளைப் படத்தில் காணப்படும் இதில் தேசத்தின் எழுச்சியும், பெருமிதமும் நிரம்பிக் காணப்படுகிறது. முதல் குடியரசு தின விழாவின்போது எப்படி இருந்ததோ நாட்டு மக்களின் எழுச்சி, இன்றளவும் அது குறையாமல் இருப்பது முக்கியமானது.

    காங்கிரஸின் தீர்மானம்

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1929ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பூரண சுயராஜ்ஜியம் தீர்மானத்தை நிறைவேற்றியது. லாகூர் மாநாட்டில் முழுமையான சுதந்திரமே எங்களுக்குத் தேவை என்று ஒரே குரலில் முழங்கியது. இதுதொடர்பான தீர்மானத்தையும் 1930ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அது நிறைவேற்றியது. மேலும் இந்தியர்கள் அத்தினத்தை சுதந்திர தினமாக கொண்டாடவும் அது அறைகூவல் விடுத்தது. அந்த தினம்தான் பின்னாளில் குடியரசு தினமாக மாறியது.

    வார்த்தையில் நம்பிக்கை

    நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள குடியரசு தின செய்தி.. மனதில் சுதந்திரம் உள்ளது. வார்த்தைகளில் நம்பிக்கை உள்ளது. இதயத்தில் பெருமை உள்ளது. நமது ஆன்மாக்களில் நினைவுகள் நிரம்பியுள்ளது. நாட்டை வணங்குவோம்.. நமது நாடு குடியரசு நாடாக மலர காரணமான அனைவரையும் வணங்குவோம். மகிழச்சிகரமான குடியரசு தின விழா வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

    வணக்குத்துக்குரிய சாச்சா ஷெரீப்

    இவர்தான் சாச்சா ஷெரீப் என்று செல்லமாக அழைக்கப்படும் முகம்மது ஷெரீப். ஒப்பற்ற செயலுக்கு சொந்தக்காரர். ஒவ்வொரு இந்தியரும் வணங்கி கெளரவித்து மரியாதை செய்ய வேண்டிய ஒரு மாமனிதர். இவர் சாதாரண சைக்கிள் மெக்கானிக். ஆனால் இவர் செய்த செயல் கடவுள் சேவைக்கு நிகரானது. கேட்பாரற்ற, ஆதரவற்றோரின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை செய்யும் தன்னலமற்ற சேவையை கடந்த 25 வருடமாக செய்து வருகிறார். இதுவரை 25,000க்கும் மேற்பட்டோரின் உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்து மாபெரும் செயலை புரிந்துள்ளார் ஷெரீப்.

    இப்படிப்பட்ட அருமையான மனிதர்களைக் கொண்டதுதான் நமது இந்தியா.. சுதந்திரத்தைப் போற்றுவோம்.. குடியரசு தினத்தை கொண்டாடுவோம்.

    English summary
    The whole country is celebrating its Republic day today and people are expressing their happiness in social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X