சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியை ஓரம் கட்டும் ஆங்கிலம்.. தாய் மொழி வளர்ச்சியையும் குறைக்கிறதாம்.. ஆய்வில் திடுக் தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய தேசியக் கல்விக் கொள்கை மூன்று மொழிகளை கற்பிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், பெரும்பாலும் இந்தி பேசும் இந்தியாவில் ஆங்கிலம்தான் இன்றும் இணைப்பு மொழியாக, ஆதிக்க மொழியாக இருந்து வருகிறது. ஆங்கிலத்துக்கு இந்தியாவில் ஆதரவு வலுக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Recommended Video

    தமிழக மருத்துவர்களை வெளியேற சொன்ன ராஜேஷ் கோட்சே| Short stories| Oneindia Tamil

    ஆங்கிலம் முக்கியத்துவம் பெறுவது தாய் மொழி வளர்ப்பை குறைத்துவிடும் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருமொழி தெரிந்து இருப்பவர்கள் சதவீதம் 1971ல் 0.18 சதவீதமாக இருந்தது. இதுவே 2011ல் 0.23 சதவீதமாக அதிகரித்தது. இது ஒரே நாட்டுக்குள் ஓரிடத்தை விட்டு ஓரிடம் செல்வது என்ற மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இடப்பெயர்வை அதிகரித்துள்ளது. ஆங்கில மொழியில் கல்வி கற்பது 2007-08ஆம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்தது. இதுவே, 2017-18ஆம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்தது.

    Indians like English as a link language than Hindi and mother language

    பெற்றோர்களே தங்களது குழந்தைகளை ஆங்கில மொழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். வரும் சந்ததிகள் அதிகமாக ஆங்கில மொழியைத்தான் தேர்வு செய்வார்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 1971ல் 12.2 சதவீதம் பேர் ஆங்கில மொழியில் பேசி வந்தனர். 2011ஆம் ஆண்டில் 24.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    2001-2011 ஆம் ஆண்டில் 15-29 வயதுக்கு உட்பட்டவர்கள் இருமொழி பேசி வந்துள்ளனர். இன்றும் வடமாநிலங்களில் அதிகளவில் இந்தி பேசுகின்றனர். இதுவே 1971 முதல் 2011ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தி வளர்ச்சி விகிதம் குறைந்து வந்துள்ளது. மகாராஷ்டிராவில் 19 சதவீதமாகவும், குஜராத்தில் 11 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1971 முதல் 2011ஆம் ஆண்டு கால கட்டத்தில் மராத்தி பேசுவது 76 சதவீதத்தில் இருந்து 69 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இதுவே மேற்குவங்க மாநிலத்தில் 85 சதவீதம் பேர் வங்க மொழி பேசி வருகின்றனர்.
    இந்த ஆய்வை இந்திரா காந்தி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    English summary
    Indians like English as a link language than Hindi and mother language
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X