சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்காரி, ரொபோசோ, ஷேர்சாட்.. ம்ஹூம்.. டிக்டாக்கை விட்டு மனசை எடுக்காத இந்தியர்கள்!

டிக் டாக் பிரபலங்கள் எல்லாம் இப்போது இந்தியாவைச் சேர்ந்த ஆப்களுக்கு மாறினாலும் அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கவில்லை என்றே தெரிகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல லட்சம் பாலோயர்களை கொண்ட பிரபலங்கள் இந்த செயலிகளான சிங்காரி, ஷேர்சாட், ரொபாசோ ஆஃப்களுக்கு மாறி வருகின்றனர். ஆனால் அந்த பிரபலங்களை பின்தொடர்பவர்கள் அதே போல இல்லை என்பதால் வீடியோ போடுபவர்கள் உற்சாகத்தை இழந்து வருகின்றனர் என்றாலும் ஃபாலோயர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

Recommended Video

    TikTok மீண்டும் Open பன்னுங்க.. ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ

    இந்தியாவில் டிக் டாக் எவ்வளவு பிரபலம் என்று சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. வீட்டு வேலைகளைக்கூட பார்க்காமல் மேக்அப் போட்டுக்கொண்டு ஆடியும் பாடியும் வீடியோ பதிவிட்டவர்கள் இருக்கிறார்கள். பலரோ எல்லை மீறி கவர்ச்சியின் உச்சத்திற்கே போய் வீடியோ போட்டு ஃபாலோயர்களை வலை வீசி பிடித்திருக்கின்றனர். இப்போது டிக் டாக் பயன்படுத்தியவர்களின் பாடு படு திண்டாட்டமாகவே போய்க்கொண்டிருக்கிறது.

    டிக் டாக் செயலி அறிமுகமாகி சில வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தாலும் பலராலும் டவுன்லோடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியர்கள் யூடியூப்பை விட அதிக நேரம் டிக் டாக்கில் செலவழித்தனர். இதனால் பலரது குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு வெட்டுக்குத்து வரை போயிருக்கிறது. சீன ஆப்களின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். டிக் டாக்கை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து பேசப்பட்டு வந்தன. இப்போது எல்லையில் நடந்த மோதலுக்குப் பிறகு டிக்டாக் எதிர்ப்புக்குரல் அதிகரித்தது.

    நம்ப முடியாது.. சீனப் படையினர் வாபஸானாலும்.. உஷார் நிலையைக் கைவிடாத இந்தியா! நம்ப முடியாது.. சீனப் படையினர் வாபஸானாலும்.. உஷார் நிலையைக் கைவிடாத இந்தியா!

    கல்வான் பள்ளத்தாக்கு மோதல்

    கல்வான் பள்ளத்தாக்கு மோதல்

    இந்திய சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி சீனாவின் 59 ஆப்களைத் தடை செய்தது இந்திய அரசு. இதனால் சோகமடைந்த இந்திய டிக் டாக் கிரியேட்டர்கள், பொழுதுபோக்குக்கு வேறு ஆப்பை தேட ஆரம்பித்தனர். இதனையடுத்து இந்த இந்திய ஆப்கள் சட்டென நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன.

    இந்திய செயலிகள்

    இந்திய செயலிகள்

    சீனா ஆப் களின் வருகைக்குப் பின்னர் சந்தை மதிப்பை இழந்த ஷேர்சாட் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் மீண்டும் தங்களது சந்தை மதிப்பையும் வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மித்ரோன் என்ற ஆப் அதிக பேரால் பதிவிறக்கப்பட்டுவந்த நிலையில், அந்த வரிசையில் இப்போது சிங்காரி சேர்ந்துவிட்டது.

    சிங்காரியின் மகிமை

    சிங்காரியின் மகிமை

    பிளே ஸ்டோர் தளத்தில் டிக்டாக் நீக்கப்பட்ட பின்னர் ஷேர்சாட், சிங்காரி, ரொபோசோ, லைக் உள்ளிட்ட செயலிகள் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. சிங்காரி ஆப்10 நாள்களில் 3 மில்லியன் டவுன்லோடுகளைக் கண்டு சாதனை படைத்துள்ளது சிங்காரி. இந்த ஆப் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பங்களா, குஜராத்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

    பார்வையாளர்கள் இல்லையே

    பார்வையாளர்கள் இல்லையே

    ஏராளமானோர் ரொபாசோ தளத்தில் தங்களின் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். டிக்டாக் தளத்தில் 8.5 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட தன்ராஜ் பிரகாஷ் சவான் இப்போது தனது வீடியோவை ரொபாசோ தளத்தில் பதிவிட ஆரம்பித்திருக்கிறார் என்றாலும் இந்த தளத்தில் ஒன்பது பேர் மட்டுமே பின் தொடர்கின்றனர். இதே போல 12 லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட மகேஷ் கப்சேவிற்கு வெறும் 2 பேர் மட்டுமே ரொபாசோ தளத்தில் பார்வையாளராக கிடைத்திருக்கிறார். அதே போல அண்ணன் தங்கையான சந்தன், சாவித்திரி தேவிக்கு டிக்டாக்கில் 27 லட்சம் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். ஆனால் ரொபாசோவில் வெறும் 67 பேர் மட்டுமே கிடைத்திருக்கின்றனர்.

    லைக் இல்லையே

    லைக் இல்லையே

    டிக்டாக்கில் 30 செகண்ட் வீடியோ போட ஒரு மணிநேரம் வரை செலவு செய்து பதிவிடும் தங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் கிடைக்கும். அதுவே பலருக்கும் உற்சாகத்தை தரும். ஓராண்டில் ஓஹோ என்று உலகப்புகழ் பெற்றவர்கள் இருக்கின்றனர். டிக் டாக் தடையால் கடந்த 10 நாட்களில் வேறு தளங்களுக்கு மாறினாலும் ஃபாலோயர்கள் கிடைக்காததால் பலருக்கும் மன அழுத்தம்தான் மிஞ்சுகிறது. சிலருக்கோ டூயட் பாட முடியவில்லையே என்ற ஏக்கம் வேறு உள்ளது. என்ன செய்வது இந்த தளத்திலும் ஃபாலோயர்கள் அதிகம் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

    அலை வீசும் என்ற நம்பிக்கை

    அலை வீசும் என்ற நம்பிக்கை

    டிக்டாக் அலை மாறி ரொபாசோ, சிங்காரி, ஷேர் சாட் பக்கம் வீசும் என்று பிரபலங்கள் காத்திருக்கின்றனர். டிக் டாக் கூகுள் ப்ளே ஸ்டோரில் 4 வது இடத்தில் இருந்தது. 200 மில்லியன் யூசர்ஸ் இருக்கின்றனர்.ரேட்டிங்கில் 4.1 ஸ்டார் ரேட் உள்ளது. திங்கட்கிழமை முதல் இந்திய ஆப்களை டவுன்லோடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரொபாசோ டாப்பில் இருக்கிறது. மோஜ் 3வது இடத்தில் இருக்கிறது. சிங்காரி நான்காம் இடத்திலும், ஷேர் சாட் ஐந்தாம் இடத்திலும் மித்ரோன் ஆறாம் இடத்திலும் இடத்திலும் உள்ளது.

    காத்திருக்கும் பிரபலங்கள்

    காத்திருக்கும் பிரபலங்கள்

    லாக்டவுன் காலத்தில் டிக்டாக் பிரபலங்கள் நிறைய வீடியோக்களை போட்டு ஃபாலோயர்ஸ்களை மகிழ்வித்தனர். டிக்டாக் தடைக்குப் பிறகு இதுபோல வீடியோக்களை பதிவிட தயாராக இருந்தாலும் அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் குறைந்து வருகிறது. புதிய செயலிகளின் மூலம் மீண்டும் பாலோயர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் சோசியல் மீடியா வைரல் பிரபலங்கள். அலை வீசுமா காத்திருப்போம்.

    English summary
    After TikTok ban Indians like Roposo, Chingari and ShareChat but their fans and followers have not
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X