சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டணி கட்சிகளுக்கு கல்தா.. அதிமுகவின் மறைமுக மேயர் தேர்தல் முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா?

உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதன் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக செக் வைத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவின் மறைமுக மேயர் தேர்தலுக்கு பின் இப்படி ஒரு காரணமா?

    சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதன் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக செக் வைத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    தமிழகத்தில் உள்ளாட்சி, நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இந்த முறை நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளின் தலைவர்களை மக்கள் தேர்வு செய்ய மாட்டார்கள்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் இவர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்வார்கள். இதுதான் மறைமுக தேர்தல் என்று அழைக்கப்படுகிறது.

    பதில் இல்லை

    பதில் இல்லை

    இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் இத்தனை மேயர் இடங்கள் வேண்டும் என்று அதிமுகவிடம் கூட்டணி கட்சிகள் கேட்க முடியாது. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுகவிடம் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மேயர் சீட்களை கேட்டு வருகிறது. ஆனால் அதிமுக இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    இவர்களுக்காகத்தான் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலை மறைமுகமாக நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநகராட்சி கவுன்சிலர்கள்தான் மேயர்களை தேர்வு செய்வார்கள். அதனால் மாநகராட்சியில் எந்த கட்சி அதிக கவுன்சிலர்களை வெல்கிறதோ அவர்கள்தான் மேயர் பதவியை பெற முடியும்.

    தேர்தலுக்கு பின்

    தேர்தலுக்கு பின்

    இதனால் தேர்தலுக்கு பின் கவுன்சிலர் பலத்தை வைத்துதான் தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடன் மேயர் பதவிக்கு பேச முடியும். தேர்தலுக்கு முன்பே கூட்டணி கட்சிகள் அதிமுகவை நெருக்க முடியாது. ஒரு மாநகராட்சியில் பெரும்பான்மை கவுன்சிலர் அதிமுக எனில், அங்கு மேயர் பதவியை அதிமுக வேறு யாருக்கும் பெரும்பாலும் தராது.

    பாஜக வெளிப்படை

    பாஜக வெளிப்படை

    இதனால்தான் அதிமுக மறைமுக தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசியல் ரீதியாக இது அதிமுகவிற்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். அதே சமயம் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இதனால் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் இதை பாஜக தற்போது வெளிப்படையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.

    என்ன விமர்சனம்

    என்ன விமர்சனம்

    செய்தி சேனல் ஒன்றில் பேசிய பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கூட்டணி கட்சிகளுக்கு இடம் தராமல் தவிர்க்கவே வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சி மேயர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை தவிர்த்து, மறைமுக தேர்தலை கொண்டு வருகிறது என்று விமர்சனம் செய்தார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் இந்த முடிவை எதிர்த்து இருக்கிறார்கள். அதேபோல் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளும் அரசின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளது.

    English summary
    Indirect election for Mayor Seat gives huge advantages to AIADMK party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X