சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சிகளில் மறைமுக தேர்தல்.. அதிமுக அமோகம்.. மாவட்ட ஊராட்சி, ஒன்றியங்களில் அதிக இடங்களில் வெற்றி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சிகளில் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவைவிட, அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்துக்கு 975 ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர், 9, 624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்பட மொத்தம் உள்ள 10 ஆயிரத்துக்கு 306 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தம் 5 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

திமுக

திமுக

பின்னர் நேரம் ஆக ஆக அதிமுக முந்தியது. மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக - 13 இடங்களையும், திமுக - 12 இடங்களையும் பெற்றுள்ளது.

திமுக வெற்றி

திமுக வெற்றி

இதேபோல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 140 இடங்களிலும், திமுக 125 இடங்களிலும் வெற்றி பெற்றது.பாமக 7, காங். 5, பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றன. சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.

ஊராட்சி துணை தலைவர்

ஊராட்சி துணை தலைவர்

ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் திமுக 107, அதிமுக 94, பாமக 19, காங். 8, சுயேச்சைகள் 25 இடங்களை வென்றனர். 27 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைவர் தேர்தல் நடைபெறவில்லை.

வாக்கு பதிவு

வாக்கு பதிவு

சில கிராம ஊராட்சிகளிலும் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறவில்லை. கடந்த 4 நாட்களாக குதிரை பேரத்தை தவிர்க்க அதிமுக, திமுக கவுன்சிலர்கள் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை வாக்குப் பதிவு செய்ய அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

English summary
Indirect elections for the 5 posts will be conducted for town panchayat bodies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X