சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக வேட்பாளர் வெற்றி பெறும் இடங்களில் தேர்தலை நிறுத்தி வைத்ததை எதிர்த்து ஹைகோர்டில் வழக்கு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறும் இடங்களில் தேர்தலை நிறுத்தி வைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு நேற்று மாவட்ட, பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் சில இடங்களில் தேர்தல் நடைமுறை நடந்துகொண்டிருக்கும் போதே நிறுத்தப்பட்டது.

indirect local body elections cancel where dmk winning chances places: dmk petition in high court

இந்நிலையில் திமுக வெற்றி பெறும் நிலையில் இருந்த கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி சார்பாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் முறையீடு செய்தார்.

குடிக்க பணம் தர மறுப்பு.. ஆடிட்டரை வெளுத்து வாங்கிய இளைஞர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!குடிக்க பணம் தர மறுப்பு.. ஆடிட்டரை வெளுத்து வாங்கிய இளைஞர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் திமுக வெற்றி பெற்றும் அதை அறிவிக்காத தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளதால் அந்த மனுவுடன் கூடுதல் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்

English summary
dmk petition in madras high court, seeking order over indirect local body elections cancel by EC where dmk winning chances places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X