சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறிவாலயத்தில் இருந்து கு.க.செல்வத்திற்கு பறந்த தகவல்கள்... யார் அந்த கறுப்பு ஆடு..?

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கு.க.செல்வத்திற்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்து அவருக்கு வேண்டியவர்கள் யாரோ ஒருவர் மூலம் ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனை விவரம் தெரியவந்திருக்கிறது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம், திமுகவில் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார். இதனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கு.க.செல்வத்துடன் நெருங்கிய நட்பு உள்ளது.

Information that flew from the anna arivalayam to kuka selvam

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வரும்போதெல்லாம் அவரை பார்க்க வரும் கட்சியினரை விசாரித்து அதற்கான காரணங்களை கேட்டு ஸ்டாலினிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் அவரது அறைக்குள் அனுமதிப்பார் இவர். மேலும்,கு.க.செல்வத்தின் ரேஞ்ச் ரோவர் கார் வந்துவிட்டாலே அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றும் தொண்டர் அணியினர் முகத்தில் உற்சாகம் பற்றிக்கொள்ளும். காரணம் கஷ்டத்தை கூறி பணம் கேட்கும் அறிவாலய ஊழியர்களுக்கு செலவுக்கு ஐநூறு, ஆயிரம் என ரூபாய் நோட்டுக்களை கொடுத்துவிட்டுச் செல்வார்.

ராஷ்யாவில் தவித்த தமிழ்நாட்டை மாணவர்களை மீட்ட சோனு சூட் - டாக்டர் ராமதாஸ் பாராட்டுராஷ்யாவில் தவித்த தமிழ்நாட்டை மாணவர்களை மீட்ட சோனு சூட் - டாக்டர் ராமதாஸ் பாராட்டு

இதனால் அண்ணா அறிவாலயத்தில் கு.க.செல்வத்திற்கு வேண்டியவர்கள் பலர் உள்ளனர். அவர் தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையிலும், அறிவாலயத்தில் இருந்து பழைய பாசத்தில், நன்றிக்கடனில் அங்குள்ள செயல்பாடுகளை செல்வம் காதில் சிலர் போட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன் தினம் துரைமுருகனுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியது உட்பட நேற்று கட்சிப் பதவியை பறிப்பது என ஸ்டாலின் முடிவெடுத்த கணமே அது ஊடகங்களுக்கு வெளியாவதற்கு முன்பே கு.க.செல்வத்திற்கு தகவல் எட்டியுள்ளது. இதையடுத்து தன் மீதான நடவடிக்கைகளை முன் கூட்டியே அறிந்துகொண்ட கு.க.செல்வம் இது தொடர்பாக வி.பி.துரைசாமி உள்ளிட்டோருடன் ஆலோசித்ததுடன் கமலாலயத்திற்கு சென்று அதிரடி பேட்டியும் கொடுத்துச் சென்றார்.

English summary
Information that flew from the anna arivalayam to kuka selvam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X