சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது? மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி!

இன்போசிஸ் நிறுவன சிஇஓ மற்றும் சிஎப்ஓவிற்கு எதிராக அளிக்கப்பட்டு இருக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்று இன்போசிஸ் சேர்மேன் நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ

    சென்னை: இன்போசிஸ் நிறுவன சிஇஓ மற்றும் சிஎப்ஓவிற்கு எதிராக அளிக்கப்பட்டு இருக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்று இன்போசிஸ் சேர்மேன் நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார்.

    இன்போசிஸ் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக வெளியாகும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சலீல் பார்கே மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலன்ஜன் ராய் ஆகியோர் மீது பணியாளர்கள் சிலர் புகார் வைத்து இருக்கிறார்கள்.

    இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு புகார் சென்றுள்ளது. இவர்கள் இருவரும் நிதி தொடர்பான மோசடிகளை செய்து வருகிறார்கள். விற்பனை தொடர்பான தவறான கணக்குகளை காட்டுகிறார்கள்.

    அந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு!அந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு!

     மிக மோசம்

    மிக மோசம்

    எங்களையும் தவறான கணக்கு காட்டும்படி அழுத்தம் அளிக்கிறார்கள். இன்போசிஸ் நிறுவனத்தின் பணத்தில்தான் சலீல் சுற்றுலா செல்கிறார்.சென்னையை சேர்ந்த இயக்குனர்களை மதராசி என்று கிண்டல் செய்கிறார்கள், என்று ஊழியர்களிடம் இருந்து புகார் சென்றுள்ளது. இந்த தொடர் சர்ச்சைகளால் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 16% சரிந்து இருக்கிறது.

     நந்தன் நிலகேனி எப்படி

    நந்தன் நிலகேனி எப்படி

    இந்தநிலையில் இந்த புகார்கள் தொடர்பாக இன்போசிஸ் சேர்மேன் நந்தன் நிலகேனி தற்போது வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். அதில், ஊழியர்கள் அளித்த புகார் கடிதம் குறித்த விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக எங்களுக்கு இரண்டு கடிதங்கள் வந்தது உண்மைதான். விரைவில் இதன் மீது நடவடிக்கை எடுப்போம்.

     சரியான புகார்

    சரியான புகார்

    சரியான நேரத்தில் இந்த புகார்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இயக்குனர்களின் போர்ட் கமிட்டிதான் இதன் மீது நடவடிக்கை எடுக்கும். எல்லா போர்ட் உறுப்பினர்களையும் அழைத்து வந்து, இதில் நாங்கள் விசாரணையை மேற்கொள்வோம்.

     என்ன கமிட்டி

    என்ன கமிட்டி

    ஆடிட் கமிட்டியும் இதில் விசாரணை நடத்தும். இந்த பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதும் என் கவனத்திற்கு வந்தது. இது தொடர்பான ஆலோசனையும் போர்ட் உறுப்பினர்கள் சந்திப்பில் விவாதிக்கப்படும். பங்குதாரர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முடிவு எடுக்கப்படும்.

     ஆடியோ இல்லை

    ஆடியோ இல்லை

    இது தொடர்பாக வெளியான ஆடியோ, மெயில் ஆதாரங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. எங்களிடம் அந்த ஆதாரங்கள் இதுவரை சமர்பிக்கப்படவில்லை. இப்போது இந்த பிரச்சனை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதால் அது தொடர்பாக கூடுதலாக கருத்து தெரிவிக்க முடியாது, என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Infosys chairman Nandan Nilekani opens up for the first time on whistleblower complaints against CEO and CFO.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X