சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்..எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - விவேக் பிரபல வசனங்கள்

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற பழமொழியை சினிமாவில் வசனமாக பேசி பிரபலப்படுத்தியவர் நடிகர் விவேக்.

Google Oneindia Tamil News

சென்னை: மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுட்டித்தம்பியாக விஞ்ஞானியாக அறிமுகமான விவேக் தனது தனித்துவமான நடிப்பு வசனங்களினால் பிரபலமானவர். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் அவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் பலராலும் பாராட்டப்பட்டது இன்றைக்கும் அது மறக்கமுடியாத வசனமாக உள்ளது.

Recommended Video

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் Vivek இன்று காலமானார்

    கோவில்பட்டியில் பிறந்த விவேக், தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். சென்னைக்கு வந்து விவேக் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

    தமிழகத்தில் இன்று 7,987 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பும் அதிகரிப்பு.. 3 மாவட்டம் மிக மோசம்! தமிழகத்தில் இன்று 7,987 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பும் அதிகரிப்பு.. 3 மாவட்டம் மிக மோசம்!

    அரசு ஊழியராக இருந்து சினிமாவிற்கு நடிக்க வந்தவர். பாலச்சந்தர் இயக்கிய திரைப்படத்தில் சிறு நடிகராக அறிமுகமாகி பிரபல நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர். தனது படங்களில் அவர் பேசிய வசனங்கள் தனித்துவமானவை. புதுப்புது அர்த்தங்கள் படத்தில் மிமிக்கிரி செய்து கொண்டே பேசும் வசனங்கள் தியேட்டர்களில் கைத்தட்டலை அள்ளியது.

    சிரிக்கவும் சிந்திக்கவும்

    சிரிக்கவும் சிந்திக்கவும்

    இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் சின்னக் கலைவாணர் என்றும், மக்களின் கலைஞன் என்றும் பட்டம் கொடுத்துள்ளனர்.

    புதுப்புது அர்த்தங்கள்

    புதுப்புது அர்த்தங்கள்

    தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் விவேக். பாலச்சந்தரின் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த விவேக் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்று சேரில் அமர்ந்து சுத்திக்கொண்டே அவர் பேசிய வசனம் என்றைக்கும் மறக்க முடியாது.

    எப்படி இருந்த நான்

    எப்படி இருந்த நான்

    இயக்குநர் பாலா உடன் நடித்த ஒரு படத்தில் விவேக்கிற்கு வசனம் சொல்லிக்கொடுப்பார். சிம்பிளா பேசுங்க. எமோசனல் வேண்டாம். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று மட்டும் சொல்லுங்க என்பார் பாலா. அதைக்கேட்ட விவேக்... இந்த டயலாக் உங்களுக்கா என்று சொல்லி சிரித்து விட்டு " எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று வசனம் பேசிவிட்டு அவர் காட்டும் உடல் மொழி பலராலும் இன்றைக்கு ரசித்து சிரிக்க வைத்துக்கொண்டுள்ளது.

    இன்னைக்கு சொல்வேன்

    இன்னைக்கு சொல்வேன்

    மக்களின் மூட நம்பிக்கையை பார்த்து அடேய் அற்ப பதர்களா... உங்களை எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா என்று சொல்வார் விவேக். நான் அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் சொல்வேன் என்று சொல்லி பஞ்ச் பேசுவார் விவேக்.

    பின்றான்பா

    பின்றான்பா

    பார்த்திபனுடன் ஒரு படத்தில் நடித்த விவேக், இயக்குநராக நடித்திருப்பார். பார்த்திபன் பேசும் வசனங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கா... பின்றான்பா என்று பாராட்டுவார். பலராலும் இன்றைக்கு அந்த வசனம் பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது.

    பின்றான்பா

    பின்றான்பா

    பார்த்திபனுடன் ஒரு படத்தில் நடித்த விவேக், இயக்குநராக நடித்திருப்பார். பார்த்திபன் பேசும் வசனங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கா... பின்றான்பா என்று பாராட்டுவார். பலராலும் இன்றைக்கு அந்த வசனம் பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது.

    டப்பு டப்பு ஜம்

    டப்பு டப்பு ஜம்

    வாயில போட்டா சிக்லெட்டு வாங்கி தின்னா கட்லெட்டு... ஜெமினி பிரிட்ஜ் என்ன அவ்வளவு நீளமாவா இருக்கு? நீங்க பட்டைய போடுவீங்களோ? நாமத்தை போடுவீங்களோ யானை இப்போ விட்டையை போடப்போறது அதை யார் அள்ளறதுன்னு பாருங்கோ என்று விவேக் பேசிய வசனங்கள் என்றைக்கும் மறக்க முடியாதவை.

    சாதிக்கணும்கிற வெறி

    சாதிக்கணும்கிற வெறி

    மீசையை முறுக்கு படத்தில் தமிழ் பற்றாளராக விவேக் நடித்திருப்பார். 'தோத்தா ஜெயிக்கணும்னு மட்டும்தான் தோணும் ஆனா அவமானப்பட்டா சாதிக்கணுங்கிற வெறியே வரும்டா' என்று சொல்வார் விவேக்.

    ஆங்கில வழி கல்வி

    ஆங்கில வழி கல்வி

    ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்று சொல்லும் அந்த பள்ளியில் தமிழின் பெருமையை சொல்வார் விவேக். ஆங்கில வழி கல்விதானே தவிர அது ஒரு அடையாளம் இல்லை. ஆங்கிலம் என்பது வெறும் மொழிதான். தமிழ்தான் நம்முடைய அடையாளம் என்று சொல்லி விவேக் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் கைத்தட்டல் அள்ளும். விவேக் மறைந்தாலும் அவர் பேசிய வசனங்கள் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும்.

    English summary
    Vivek, who made his debut as a pointer scientist in the film Must Be Minded, is famous for his unique acting verses. The verse he uttered in the film New Meanings 'Today is the day of death' was praised by many and it is still a memorable verse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X