சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோர்ட்டு பக்கம் வாடா.. துண்டு துண்டா வெட்டறேன்.. போதையில் போலீஸை மிரட்டும் இன்ஸ்பெக்டரின் மகன்

Google Oneindia Tamil News

சென்னை: போலீஸாரை மிரட்டும் தொனியில் பேசிய இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்யுமாறு சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் நேற்று இரவு குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீஸார் மடக்கினர். அவரிடம் ஹெல்மெட் போடாதது ஏன் என கேட்டனர்.

அதற்கு போலீஸாரை ஒருமையில் பேசினார் அந்த இளைஞர். குடிபோதையில் இருந்ததால் போலீஸாரும் பொறுமையாக பேசினர். எனினும் அடங்காமல் கோர்ட் பக்கம் வாடா உன்னை வெட்டிடுவேன் என போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தார். மேலும் போட்டோ எடுக்க வேண்டும் என்றவுடன் இந்தா எடுத்துக்கோ இருவிரல்களை நீட்டி தெனாவெட்டாக போஸ் கொடுத்தார் அந்த இளைஞர்.

ஆய்வாளர்

ஆய்வாளர்

விசாரணையில் அந்த இளைஞர் சட்டக் கல்லூரி மாணவர் என்றும் அவரது தந்தை மைனர் சாமி என்றும் திருவள்ளூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

கைது

கைது

இன்ஸ்பெக்டரின் மகன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ விவகாரம் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

நல்ல மனிதர்

நல்ல மனிதர்

போக்குவரத்து ஆர்.ஐ. புகாரின் பேரில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது, கொலை முயற்சி என 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி. மிகவும் நல்ல மனிதர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இவருக்கு பிறந்த மகன் அவருடைய பதவியை கலங்கப்படுத்தி உள்ளது வேதனையை தருகிறது.

யார் தவறு செய்து இருந்தாலும் காவலர்கள் உட்பட கடும் நடவடிக்கையை காவல் துறை ஆணையர் எடுத்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

English summary
Thiruvallore Food cell Inspector's son threatens policemen near Chennai. He is intaking liquor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X