சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அல்லாத சிகிச்சைகளை தொடங்கிய மருத்துவமனைகள்.. அதிகரிக்கும் இன்சூரன்ஸ் கிளைம்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்புக்கு இடையே மற்ற சிகிச்சைகளை மருத்துவமனைகள் செய்ய தொடங்கி உள்ளது. இதனால் தற்போது காப்பீட்டு தொகை கோரிக்கைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் கொரோனா சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டது. அதாவது அவசரம் இல்லாத கால் எலும்பு சிகிச்சை, அவசர தேவை இல்லாத சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் இந்த சிகிச்சைகளுக்கு காப்பீட்டு தொகை கோரிக்கை (இன்சூரன்ஸ் கிளைம்) வைக்கும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. சிகிச்சைகள் எதுவும் செய்யப்படாத காரணத்தால் காப்பீட்டு தொகை கோரிக்கை எண்ணிக்கை குறைந்தது.

கோமியம் குடித்தால் கொரோனா குணமாகாது.. பாஜக தலைவர்களுக்கு மேகாலயா ஆளுநர் ததகதா ராய் கோமியம் குடித்தால் கொரோனா குணமாகாது.. பாஜக தலைவர்களுக்கு மேகாலயா ஆளுநர் ததகதா ராய்

மீண்டும் அதிகரித்துள்ளது

மீண்டும் அதிகரித்துள்ளது

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த சிகிச்சைகள் தொடர்பாக வைக்கப்படும் காப்பீட்டு தொகை கோரிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு பிறகு இந்த காப்பீட்டு தொகை கோரிக்கைகள் மீண்டும் உயர்ந்து உள்ளது. அதன்படி கொரோனா அல்லாத சிகிச்சைகளுக்கு வைக்கப்படும் காப்பீட்டு தொகை கோரிக்கை 1.5 லட்சமாக (2000 கோடி ரூபாய் மதிப்பு) உயர்ந்துள்ளது.

கொரோனா இல்லை

கொரோனா இல்லை

மொத்தம் இந்த காப்பீட்டு தொகை கோரிக்கை 35% உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா தொடர்பான நோய்களுக்கு வைக்கப்படும் காப்பீட்டு தொகை கோரிக்கையும் உயர்ந்துள்ளது. முதலில் மக்கள் அரசு மருத்துவ நிறுவனங்களில்தான் இலவசமாக கொரோனா சிகிச்சை மேற்கொண்டனர். இப்போது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வதால், கொரோனா சிகிச்சைக்கும் காப்பீட்டு தொகை கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

என்ன நோய்கள்

என்ன நோய்கள்

பொதுவாக தற்போது கொரோனா அல்லாத சிகிச்சை என்று பார்த்தல் கால் எலும்பு சிகிச்சை, முட்டி எலும்பு மாற்றுதல், இதய அறுவை சிகிச்சை, கேன்சர் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இதற்குதான் தற்போது அதிகமாக காப்பீட்டு தொகை கோரிக்கை செய்யப்படுகிறது. இதன் அர்த்தம் மருத்துவமனைகள் தற்போது கொரோனா அல்லாத பெரிய சிகிச்சைகளையும் செய்ய தொடங்கி உள்ளது என்பதுதான்.

எவ்வளவு உயர்வு

எவ்வளவு உயர்வு

இந்த காப்பீட்டு தொகை கோரிக்கைகள் 50% சரிந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் 85%ஆக இது உயர்ந்துள்ளது. பொதுவாக 41 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு தொகை கோரிக்கைகள் சராசரியாக வைக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா சோதனையும் சேர்த்து 51 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு தொகை கோரிக்கைகள் வைக்கப்படுகிறது . இதில் 1.2 காப்பீட்டு தொகை கோரிக்கைகள் பொது காப்பீட்டு கவுன்சிலிடமும், 30 ஆயிரம் காப்பீட்டு தொகை கோரிக்கைகள் ஆயுஷ் பாரத் அமைப்பிடமும் வைக்கப்படுகிறது.

English summary
Insurance claims increase for general treatments amid the end of the lockdown in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X