சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகை திரும்பி பார்க்க வைத்த சண்முக சுப்பிரமணியன்.. ட்விட்டரில் சர்வதேச ஊடகங்கள் முற்றுகை

Google Oneindia Tamil News

Recommended Video

    How did Shanmuka Subaramanyam help NASA

    சென்னை: சந்திரயான் -2 விக்ரம் லேண்டரின் சிதைந்த பகுதிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழரான சண்முக சுப்பிரமணியனின் ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் அவரது பேட்டிக்காக முற்றுகையிட்டுள்ளனர்.

    சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சிதைந்த பகுதிகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு செய்து அவ்வப்போது படங்களை வெளியிட்டு வந்தது. இந்த படங்களை ஆராய்ந்த தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியன், நாசாவுக்கு ஒரு இ மெயில் அனுப்பினார்.

    International medias now move to Tamilnadu engineer Shanmuga Subramanian

    அதில் விக்ரம் லேண்ட்ரனின் சிதைந்த பகுதிகளின் இருப்பிடம் குறித்து தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ஆய்வு செய்த நாசாவும் விக்ரம் லேண்டரின் சிதைந்த பகுதிகளின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அதற்கு S என பெயரிட்டுள்ளதாக பிரகடனம் செய்தது.

    International medias now move to Tamilnadu engineer Shanmuga Subramanian

    தற்போது நாசாவுக்கே வழிகாட்டியாக இருந்த சண்முக சுப்பிரமணியனை ஒட்டுமொத்த உலகமும் வியப்புடன் திரும்பிப் பார்க்கிறது. சண்முக சுப்பிரமணியன் ட்விட்டர் பக்கத்தில் உலகின் முன்னணி ஊடகங்களின் மூத்த பத்திரிகையாளர்கள் அவரை தொடர்பு கொள்வது எப்படி? உங்களுக்கு இ மெயில் என்ன? எங்களுக்கு எப்போது பேட்டி தருவீர்கள்? என வரிசை கட்டி முற்றுகையிட்டு நிற்கின்றனர்.

    சந்திராயன் 2.. ஆதி முதல் அந்தம் வரை.. எல்லாமே தமிழர்கள்தான்.. வியந்து பார்க்கும் வடஇந்தியா!சந்திராயன் 2.. ஆதி முதல் அந்தம் வரை.. எல்லாமே தமிழர்கள்தான்.. வியந்து பார்க்கும் வடஇந்தியா!

    English summary
    Now all Internaional medias now move to Tamilnadu engineer Shanmuga Subramanian who helped to NASA's finding of Vikram Lander debris.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X