சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுவாரஸ்யம்.. துணை சபாநாயகர் பதவியில் இருந்த பலரும்.. ஒரே கட்சியில் இருந்ததா வரலாறே இல்லை!!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் துணை சபாநாயகர் பதவி வகித்தவர்களில் பலரும் ஒரே கட்சியில் நீடித்ததாக சரித்திரம் இல்லை என்பதை திமுகவை விட்டு பாஜகவில் ஐக்கியமான வி.பி. துரைசாமியும் நிரூபித்திருக்கிறார்.

Recommended Video

    Tamil Nadu Lockdown Extension After May 31?

    தமிழக அரசியலில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்களுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படுவது ஒரு மரபு. இது பல நேரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் இப்பணியை செழுமையாக்கிய பண்பாளர்கள் பலரும் உண்டு.

    இந்திய அரசியலில் சபாநாயகரின் அதிகாரம் குறித்து பேச்சுவரும் போது எல்லாம் தமிழக சட்டசபையும் அதில் தவறாது இடம் பெறும். அதுவும் சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியனின் வானளாவிய அதிகாரம் என்ற சொல் ஜனநாயக வரலாற்றில் கல்வெட்டாய் பதிந்து இருக்கிறது.

    ராயபுரத்தில் அதிகபட்சமாக 2065பேருக்கு கொரோனா.. சென்னையில் பாதிப்பு குறைந்தது எங்கு..வெளியானது லிஸ்ட்v

    அதிமுகவில் எட்மண்ட்

    அதிமுகவில் எட்மண்ட்

    இன்னொருபுறம் 1970களில் இருந்து துணை சபாநாயகராக பதவி வகித்த பலரும் ஒரே கட்சியில் நீடித்தது இல்லை என்கிற ஒரு விசித்திர வரலாறும் தமிழகத்துக்கு இருக்கிறது. 1969-ம் ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி முதல் 1971-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி வரை துணை சபாநாயகராக இருந்தவர் ஜி.ஆர். எட்மண்ட். திமுக உடைந்து அதிமுக உதயமான போது சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுகவில் ஐக்கியமானார் எட்மண்ட். அப்போது காளிமுத்து, முனு ஆதி உள்ளிட்டோரும் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்தனர் என்பது வரலாறு.

    விருதுநகர் பெ. சீனிவாசன்

    விருதுநகர் பெ. சீனிவாசன்

    பின்னர் 1971 மார்ச் 24 முதல் 1974-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி வரை விருதுநகர் சீனிவாசன் துணை சபாநாயகராகப் பணியாற்றினார். இவர்தான் 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜை தோற்கடித்தவர். இந்த விருதுநகர் சீனிவாசனே பின்னாளில் அதிமுகவுக்கு தாவினார். 2009-ம் ஆண்டு மறையும் வரை சீனிவாசன், அதிமுகவில்தான் இருந்தார்.

    எஸ். திருநாவுக்கரசர்

    எஸ். திருநாவுக்கரசர்

    1977-ம் ஆண்டு ஜூலை 6-ந் தேதி முதல் 1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி வரை தமிழக சட்டசபை துணை சபாநாயகராக இருந்தவர் எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை எஸ். திருநாவுக்கரசர். பின்னர் ஜெயலலிதாவின் தளபதியாக நெடுங்காலம் பயணித்தார். ஜெயலலிதாவுடன் முரண்பட்டு தனிக்கட்சி, பாஜக என பல கட்சி தாவி கடைசியாக காங்கிரஸில் ஐக்கியமாகி இருக்கிறார். இப்போது காங்கிரஸ் கட்சியின் திருச்சி லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

    பி.எச். பாண்டியன்

    பி.எச். பாண்டியன்

    1980-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி முதல் 1984-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி வரை துணை சபாநாயகராக இருந்தவர் பி.எச். பாண்டியன். பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்த போது ஜானகி அணியில் ஐக்கியமானார். அப்போது நடைபெற்ற தேர்தலில் ஜானகி அணியின் ஒரே எம்.எல்.ஏ. என்ற பெருமைக்குரியவராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் அணியில் இருந்தார் பி.எச். பாண்டியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வி.பி. பாலசுப்பிரமணியன்

    வி.பி. பாலசுப்பிரமணியன்

    1985-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி முதல் 1988 ஜனவரி 30-ந் தேதி வரை தமிழக சட்டசபை துணை சபாநாயகராக இருந்தவர் வி.பி.பாலசுப்பிரமணியன். எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்களில் ஒருவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியில் இணைந்தார். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுகவில் பணியாற்றினார். பின்னர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் 1996 சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் மதிமுகவின் குடை சின்னத்தில் அக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

    திமுக டூ பாஜக

    திமுக டூ பாஜக

    1989 பிப்ரவரி 8-ந் தேதி முதல் 1991 ஜனவரி 30-ந் தேதி வரை திமுக ஆட்சிக் காலத்தில் துணை சபாநாயகராக இருந்தவர் வி.பி. துரைசாமி. 2006-ம் ஆண்டு மே 19-ந் தேதி முதல் 2011-ம் ஆண்டு மே 14-ந் தேதி வரை 2-வது முறையாகவும் துணை சபாநாயகராக இருந்தார் வி.பி. துரைசாமி. தற்போது திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்.

    காந்திராஜன்

    காந்திராஜன்

    1991 ஜூலை3-ந் தேதி முதல் 1993-ம் ஆண்டு மே 16-ந் தேதி வரை பேராசிரியர் பொன்னுசாமி துணை சபாநாயகராக இருந்தார். பின்னர் அவர் திமுகவுக்கு தாவி மீண்டும் தாய் கட்சி திரும்பினார். 1993- அக்டோபர் 27-ந் தேதி முதல் 1996-ம் ஆண்டு மே 13-ந் தேதி வரை காந்திராஜன், துணை சபாநாயகராக இருந்தார். இவரும் பின்னர் திமுகவுக்கு தாவினார்.

    திமுக டூ அதிமுக பரிதி இளம்வழுதி

    திமுக டூ அதிமுக பரிதி இளம்வழுதி

    1996-ம் ஆண்டு மே 23-ந் தேதி முதல் 2001-ம் ஆண்டு மே 14-ந் தேதி வரை திமுக ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்தவர் பரிதி இளம்வழுதி. கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்து மரணித்தார். துணை சபாநாயகர் பதவிதான் என்று இல்லை சபாநாயகர்களாக பதவி வகித்தவர்கள் கூட இப்படி கட்சி மாறி இருக்கிறார்கள். சி.பா. ஆதித்தனார்; கே.ஏ. மதியழகன் மற்றும் தமிழ்க்குடிமகன் ஆகியோரும் கட்சி மாறிய சபாநாயகர்கள்.

    English summary
    Here is a intresting political history of TN Deputy Speakers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X