சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தொழில் தொடங்க வாங்க.. 8 முன்னணி மருத்துவ நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: எட்டு சர்வதேச அளவிலான மருந்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார், அவர்களை மாநிலத்தில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முதலீடுகளை ஊக்குவிக்க அரசு திட்டமிட்டுள்ளளது. அதில் ஒரு நடவடிக்கை தான் முதல்வரின் இந்த கடிதம்.

Recommended Video

    8 முன்னணி மருத்துவ நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் கடிதம்

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்காக கிண்டியில் சிறப்பு மருத்துவமனை.. விஜயபாஸ்கர் அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்காக கிண்டியில் சிறப்பு மருத்துவமனை.. விஜயபாஸ்கர்

    இநதியாவுக்கு வர விருப்பம்

    இநதியாவுக்கு வர விருப்பம்

    கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன.

    தமிழகத்தில் முதலீடு

    தமிழகத்தில் முதலீடு

    அண்மையில் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

    மருந்து நிறுவனங்கள்

    மருந்து நிறுவனங்கள்

    உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது, அக்யூரே நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஜோசுவா லெவின், பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் பிரான்ஸ் வேன் கௌட்டன், சீமென்ஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் ஜெர்டு உறாப்னர், சிரோனா டெண்டல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டொனால்டு கேசி, காப்பியம்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் வில்லியம் லியு.

    8 நிறுவன தலைவர்களுக்கு கடிதம்

    8 நிறுவன தலைவர்களுக்கு கடிதம்

    ஜி ஈ ஹெல்த் கேர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கிரென் மர்ப்பி, உறர்கோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மைக்கேல் டோவார் மற்றும் பாஸ்டன் சயன்டிபிக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் மைக்கேல் எப்.மகோனி ஆகிய 8 முன்னணி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

    முதல்வர் கடிதம்

    முதல்வர் கடிதம்

    அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami has written to the heads of eight global pharmaceutical companies, inviting them to invest in the state
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X