சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. மீண்டும் வேகம் எடுக்கும் அமலாக்கத்துறை.. கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய தொடங்கி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மீண்டும் கவனம் பெற தொடங்கி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.

INX Media Case: ED starts investigating Karti Chidambaram again

அப்போது நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பதற்காகவும், அதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாகவும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது. பின்னர் இந்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, இரண்டு வாரம் விசாரிக்கப்பட்டார். அதன்பின் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு, 106 நாட்கள் திகார் சிறையில் இருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் நிறைய நடவடிக்கைகளை சந்தித்துள்ளார்.

இதில் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் சில முடக்கப்பட்டிருந்தன. மேலும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சுமார் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான டெல்லி வீடும் ஒன்று முடக்கப்பட்டது.

3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்!3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்!

இதில் மீண்டும் அமலாக்கத்துறை வேகம் காட்ட தொடங்கி இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய தொடங்கி உள்ளது. இன்று டெல்லியில் அமலாக்கத்துறை அவரிடம் நடத்தியது. அந்நிய முதலீட்டிற்கான அனுமதி பெற்றுத்தந்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக கேள்விகளை அவரிடம் கேட்டது.

இதனால் விரைவில் கார்த்தியின் பெயில் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

English summary
INX Media Case: Enforcement Directerate starts investigating Karti Chidambaram again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X