சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப. சிதம்பரத்தை சிபிஐ ஏன் பழி வாங்குகிறது என்று தெரியும்.. கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது சிபிஐ அமைப்பை மத்திய அரசு ஏவி உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது சிபிஐ அமைப்பை மத்திய அரசு ஏவி உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் இன்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

INX Media Case: K S Alagiri stands with P Chidambaram

இதையடுத்து ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் ப. சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இன்று இரவே கூட ப.சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இந்த நிலையில் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிந்தது குறித்து தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

அதில், என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம்? அவரை ஏன் சிபிஐ இப்படி நெருக்குகிறது என்று தெரியும். அவர் ஆட்சிக்கு எதிராக பேசி வருகிறார்.

பிரதமர் மோடியை ப. சிதம்பரம் ஆதாரங்களுடன் விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டி உள்ளார்.

English summary
INX Media Case: Tamilnadu Congress chief K S Alagiri stands with P Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X