சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா?.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் பங்க்குகள் நாளை தொடர்ந்து திறந்து வைத்திருக்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு , சென்னை ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

IOC says that Petrol Bunks should be opened in all areas

இந்த நிலையில் மேற்கண்ட 7 மாவட்டங்களுக்கு அரசு பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

"யாரும் பயப்படாதீங்க.. 2 நாளைக்கு வீட்டை விட்டு வர வேண்டாம்".. நீலகிரி கலெக்டர் திவ்யா வேண்டுகோள்!

இந்த நிலையில் மேற்கண்ட 7 மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவித்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து இன்றைய தினமே பெட்ரோல், டீசலை நிரப்ப பெட்ரோல் பங்க்குகளுக்கு முண்டியடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பெட்ரோல் பங்க்குகள் தொடர்ந்து திறந்து வைத்திருக்க வேண்டும். பெட்ரோல் பங்க்குகளை மூட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Indian Oil Corporation says that Petrol bunks should be opened for all areas despite cyclone affect places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X