சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன் எஃபெக்ட்.. வெயிட் போட்ட ரோஹித்.. செம ஃபிட்டான தோனி.. ஆனாலும் எட்டிப்பார்த்த குட்டி தொப்பை!

Google Oneindia Tamil News

சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனி செம ஃபிட்டாக பாடி பில்டர் போன்று மாறியிருப்பது தோனி வெறியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாகதான் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் 2020 போட்டிகள் அபுதாயில் நேற்று தொடங்கின. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

ஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்!ஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்!

வீரர்கள் எடை கூடி

வீரர்கள் எடை கூடி

இதன் முதல் போட்டியிலேயே மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடிய பலர் வீரர்களும் எடை கூடி காணப்பட்டனர்.

கச்சிதமாக பயன்படுத்தி

கச்சிதமாக பயன்படுத்தி

லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்தது வீரர்களின் எடை கூடியதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிலர் லாக்டவுன் சான்ஸை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு ஃபிட்டாகியுள்ளனர்.

குட்டி தொப்பை

குட்டி தொப்பை

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி ஃபிட்டாகியிருக்கிறார். எடை குறைந்து பாடி பில்டர் போன்று காணப்பட்டார் தோனி. தோனியின் உடல் எடை குறைந்து ஆர்ம்ஸ், செஸ்ட் போன்ற இடங்கள் டைட்டாக இருந்தாலும் குட்டித் தொப்பை லைட்டாக எட்டிப்பார்த்தது.

லாக்டவுன் எஃபெக்ட்

லாக்டவுன் எஃபெக்ட்

முன்னதாக டாஸ் போடும்போதே கமென்ட்டட்டரான முரளி கார்த்திக் தோனியிடம் எப்படி இப்படி ஃபிட்டானீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த தோனி எல்லாம் லாக்டவுன் எஃபெக்ட் என்று தனக்கே உரிய பாணியில் கூலாக சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெயிட் போட்ட ரோஹித்

வெயிட் போட்ட ரோஹித்

சென்னையில் அணி வீரர்கள் பியூஷ் சாவ்லா, வாட்சன், முரளி விஜய் உள்ளிட்டோரும் ஒரு சுற்று எடை கூடிப் போயுள்ளனர். இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும் எடை கூடி தொப்பையும் தொந்தியுமாக உள்ளார்.

சீசன் முடிவதற்குள்

சீசன் முடிவதற்குள்

அந்த அணியில் இடம் பெற்றுள்ள பொல்லார்டு, சவுரவ் திவாரி உள்ளிட்ட சிலர் எடை கூடி காணப்பட்டனர். வீரர்கள் எடை கூடி இருப்பதை பார்த்த ரசிகர்கள் நடப்பு ஐபிஎல் சீசன் முடிவடைவதற்குள் எடை குறைந்து ஃபிட்டாகி விடுவார்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
IPL 2020: Many Players have put on weight due to Lock down. MS Dhoni looks fit but his little belly peeked out lightly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X