சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இமேஜ் அரசியல்.. திமுகவின் தோனி பாசம்.. சிஎஸ்கேவை திடீரென பாராட்டிய ஸ்டாலின்.. இதுதான் காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: சிஎஸ்கே மும்பை போட்டியின் போது திமுக தலைவர் ஸ்டாலின், சிஎஸ்கே அணியை பாராட்டியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே வென்றது. நேற்று முதலில் ஆடி 20 ஓவரில் மும்பை 162 ரன்கள் எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய சென்னை அணியில் அம்பதி ராயுடு 71 ரன்களும், டு பிளசிஸ் 58 ரன்களும் எடுத்தனர்.மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. 19.2 ஓவரில் சிஎஸ்கே 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம்... டிசம்பர் மாதம் டூரை தொடங்கும் பிரேமலதா விஜயகாந்த்..! தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம்... டிசம்பர் மாதம் டூரை தொடங்கும் பிரேமலதா விஜயகாந்த்..!

ஸ்டாலின் டிவிட்

ஸ்டாலின் டிவிட்

நேற்று சிஎஸ்கே மும்பை போட்டியின் போது டிவிட் செய்த ஸ்டாலின், உங்களுக்கு தெரியுமா.. " மஞ்சள் நிற அணியினர் களத்தில் இறங்கும் நேரம் வந்துவிட்டது என உங்களுக்கு தெரியும், கர்ஜிக்க உள்ள சிங்கங்களுக்கு தமது மண்ணிலிருந்து விசில் அடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார். கேப்டன் தோனிக்கு குட் லக் என்று ஸ்டாலின் தனது டிவிட்டில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

ஓய்வு குறித்த்து

ஓய்வு குறித்த்து

முன்னதாக தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் தலைவர் இதேபோல் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். அதில், எம்.எஸ் தோனியின் பொன்னான காலத்தை கண்டிப்பாக மிஸ் செய்வோம். கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான பங்களிப்பிற்கும் அவரின் தலைமை பண்பிற்கும் நன்றிகள். கேப்டன் கூல். உங்களின் அடுத்த இன்னிங்சிற்கு வாழ்த்துக்கள்.., என்று ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.

கனிமொழி

கனிமொழி

முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஸ்டாலின் இந்த டிவிட்டை செய்துள்ளார். கருணாநிதி, தோனியை பலமுறை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திமுக எம்பி கனிமொழியும் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் செய்து இருந்தார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

திடீரென்று திமுக இப்படி சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவிக்க காரணம் இருக்கிறது... வேறு என்ன எல்லாம் தேர்தல் நேரம்தான். கடந்த சில வாரங்களாக ஸ்டாலின் தன்னை மிகவும் ஆக்டிவாக வைத்து இருக்கிறார். காலையில் சைக்கிளிங் செல்வது. அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது. தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றுவது.

உடல் பிட்டாக உள்ளது

உடல் பிட்டாக உள்ளது

உடலை பிட்டாக வைத்து இருப்பது என்று ஸ்டாலின் அடுத்தடுத்து நிறைய அதிரடியை செய்து வருகிறார். முழுக்க முழுக்க இளைஞர்கள் முன் ரீச் ஆக வேண்டும் என்று ஸ்டாலின் இப்படி செய்து வருகிறார். இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றுதான் இப்போது இணைய வழி திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக ''எல்லோரும் நம்முடன்'' என்று பிரச்சாரத்தையும் ஸ்டாலின் செய்து வருகிறார்.

டிவிட் காரணம்

டிவிட் காரணம்

இதன் ஒரு கட்டமாகவே, தோனியை குறித்து ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். இது முழுக்க முழுக்க பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஸ்டிரேட்டஜி என்கிறார்கள். தேசிய அரசியலில் பிகே செய்த அதே ஸ்டிரேட்டஜியை தற்போது தமிழகத்திலும் ஸ்டாலினுக்காக செய்கிறார். டெல்லி தேர்தலிலும் இதேபோல் ஆம் ஆத்மி கட்சி டெல்லி ஐபிஎல் வீரர்களுக்கு ஆதரவாக பேசியது. டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன், ஆம் ஆத்மி தலைவர்களை பலர் டெல்லி கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாக பேசினார்கள்.

கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் வீரர்கள்

அதேபோல் 2014 சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்ட போது, பாஜக தலைவர்கள் பலர் கிரிக்கெட் வீரர்களை தங்கள் பக்கம் இழுத்தனர். கம்பீர் தொடங்கி ஜடேஜா வரை பல கிரிக்கெட் வீரர்கள் பாஜகவிற்கு நேரடியாகவும், மறைமுகமாவும் ஆதரவு தெரிவித்தனர். பிரபலங்களின் மக்கள் ஆதரவை அப்படியே வாக்குகளாக மாற்றும் ஸ்டிரேட்டஜி இது.

சினிமா பிரபலம்

சினிமா பிரபலம்

தமிழகத்தில் இதுநாள் வரை சினிமா பிரபலங்கள்தான் அரசியல் உலகில் முக்கிய வாக்கு வங்கிகளாகஇருந்தனர் . தற்போது தோனி குறித்து பேசி, கிரிக்கெட் வீரர்களையும் அரசியலுக்கு உள்ளே கொண்டு வந்து உள்ளனர். சிஎஸ்கே குறித்து பேசுவது, துடிப்பாக இளைஞர் போல இருப்பது என்று, தனக்கு என்று ஸ்டாலின் ஒரு இமேஜை உருவாக்கி வருகிறார்.

இமேஜ் அரசியல்

இமேஜ் அரசியல்

இளைஞர்கள் உடன் நெருக்கமாக வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இந்த இமேஜை உருவாக்கி வருகிறார். உதயநிதியை திமுக அதிகம் முன்னிறுத்தவும் இந்த இளைஞர்கள் வாக்குகளே காரணம். இமேஜ் அரசியலில் அதிக முக்கியத்துவம் செலுத்தும் பிகே, அதே பாணியை திமுகவில் செய்து வருகிறார். ஸ்டாலின் இனி சிஎஸ்கே பற்றி மட்டுமல்ல நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் குறித்து பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

English summary
IPL 2020: Why M K Stalin tweeted about CSK and Dhoni? - Here is the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X