சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதை மட்டும் "டச்" செய்யாத கேகேஆர்.. விளாசிய சிஎஸ்கே.. குழம்பிய ஸ்ரீகாந்த்.. மேட்சில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிராக இன்று கொல்கத்தா பவுலர்கள் பவுலிங் செய்த விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

2021 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி தற்போது நடந்து வருகிறது. சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

சிஎஸ்கே vs கேகேஆர்.. 2 டீமில் மொத்தம் 6 பேர்.. ஐபிஎல் கப் யாருக்குன்னு தீர்மானிக்க போறது இவுங்கதான்! சிஎஸ்கே vs கேகேஆர்.. 2 டீமில் மொத்தம் 6 பேர்.. ஐபிஎல் கப் யாருக்குன்னு தீர்மானிக்க போறது இவுங்கதான்!

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே வேகமாக ஆடி அதிக இலக்கை நிர்ணயிக்க முயன்றது.

 சிஎஸ்கே

சிஎஸ்கே

பொதுவாக சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஸ்பின் பவுலிங்கில் நன்றாக ஆட கூடியவர்கள். கொல்கத்தா அணியின் ஸ்பின் பவுலிங்கில் மற்ற அணி வீரர்கள் அக்ராஸ் ஆடி அவுட்டாவது வழக்கம். இதனால்தான் கொல்கத்தாவின் ஸ்பின் பவுலிங்கில் பெரும்பாலான அணிகள் சுருண்டன. ஆனால் சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் எல்லோருமே இறங்கி வந்து ஆட கூடியவர்கள்.

 ஸ்பின் பவுலிங்

ஸ்பின் பவுலிங்

இறங்கி வந்து நேராக அடிக்க கூடியவர்கள். இதனால்தான் கடந்த இரண்டு லீக் ஆட்டத்திலுமே சிஎஸ்கே அணி கொல்கத்தாவின் ஸ்பின் பவுலிங்கை துவம்சம் செய்தது. ஆனாலும் சிஎஸ்கே டாப் ஆர்டரில் ருத்துராஜ் தவிர மற்ற டு பிளசிஸ், உத்தப்பா, ரெய்னா (இன்று ஆடவில்லை), ராயுடு, மொயின் என்று எல்லோருமே ஷார்ட் பாலில் சொதப்ப கூடியவர்கள். ஷார்ட் பந்தை அடிக்க தெரியாமல் சொதப்பி தேவையின்றி அவுட்டாவது இவர்களின் வழக்கம்.

Recommended Video

    IPL 2021 Final, Du Plessiss 86 powers Chennai to 192-3 in 20 overs vs KKR | Oneindia Tamil
     ஷார்ட் பால்

    ஷார்ட் பால்

    டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற அணிகள் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தியது இந்த ஷார்ட் பந்துகள் மூலம்தான். ஆனால் இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக பவுலர்கள் யாருமே பெரிதாக ஷார்ட் பந்துகளை வீசவில்லை. மாவி, பெர்குசன் ஆகியோர் சிஎஸ்கேவிற்கு ஷார்ட் பந்துகளை பெரிதாக வீசவில்லை. பெர்குசன் தனது முதல் ஓவரில் ஒரே ஒரு ஷார்ட் பந்துதான் வீசினார். அதுவும் கூட வைட் பந்து.

     டு பிளசிஸ்

    டு பிளசிஸ்

    மற்ற ஷார்ட் பந்துகள் எல்லாம் அவ்வளவு உயரமாக வரவில்லை. இதனால் எளிதாக டு பிளசிஸ் பவுண்டரி சிக்ஸ் அடித்தார். முறையான ஷார்ட் பந்துகளை வீசாமல் இவர்கள் சொதப்பியது சிஎஸ்கேவிற்கு சாதகமாக மாறியது. சிஎஸ்கேவின் வீக் பாயிண்டை மட்டும் கொல்கத்தா டச் செய்யவே இல்லை. இதைத்தான் வர்ணனை செய்த கிரிஸ் ஸ்ரீகாந்தும் கேள்வி எழுப்பினார்.

     கிரிஸ் ஸ்ரீகாந்த்

    கிரிஸ் ஸ்ரீகாந்த்

    ஏன் கொல்கத்தா ஷார்ட் பந்து போடவில்லை.. இவர்களின் பிளான் புரியவில்லையே என்று குழப்பமாக கேட்டார். இதைத்தான் பயன்படுத்திக்கொண்டு சிஎஸ்கே அணி வீரர்கள் வெளுத்து வாங்கினார்கள். ருத்துராஜ், உத்தப்பா, டு பிளசிஸ் என்று மூன்று பேருமே தொடக்கத்திலே டேக் ஆன் செய்து ஆடினார்கள். கொல்கத்தாவின் இந்த பவுலிங் திட்டம் இன்று சொதப்பியது சிஎஸ்கேவிற்கு சாதகமாக அமைந்தது.

    English summary
    IPL 2021 CSK vs KKR final match: Why Kolkata bowlers did not bowl much short balls against CSK?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X