சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோனியின் எதிர்காலம்.. என்ன நடந்தாலும்.. விடமாட்டோம்.. பைனலுக்கு பின் பெரிய முடிவு எடுத்த சிஎஸ்கே!

Google Oneindia Tamil News

தோனியின் எதிர்காலம்.. என்ன நடந்தாலும்.. விடமாட்டோம்.. பைனலுக்கு பின் முக்கிய முடிவு எடுத்த சிஎஸ்கே!

Recommended Video

    அடுத்த வருஷம் என்ன பிளான்? Dhoni-ன் பதிலால் உற்சாகமான ரசிகர்கள்

    சென்னை: 2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் தோனி ஆடுவாரா மாட்டாரா என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கெத்தாக மாஸாக கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தாவை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை சிஎஸ்கே வென்றுள்ளது.

    8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

    இந்த போட்டிதான் ஒருவேளை தோனிக்கு கடைசி சிஎஸ்கே போட்டியாக இருக்கும் என்றும் கூட தகவல்கள் வெளியாகின. போட்டிக்கு பின் ஹர்ஷா போக்லேவும் கூட நீங்கள் மீண்டும் ஆடுவீர்களா என்று தோனியிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.

    மழுப்பாமல் பதில்

    மழுப்பாமல் பதில்

    நீங்கள் இதற்கு மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும் என்று போக்லே கேட்ட கேள்விக்கு தோனி சுவாரசியமாக பதில் அளித்து. பிசிசிஐ கையில்தான் முடிவு இருக்கிறது. பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறது, எத்தனை பேரை ஒரு அணி தக்க வைக்கலாம் என்று முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்தே நான் ஆடுவது உறுதியாகும். ஆனால் இப்போதுவரை நான் கிளம்பவில்லை.. நான் இன்னும் சிஎஸ்கேவை விட்டு கிளம்பவில்லை என்று தோனி குறிப்பிட்டு இருந்தார்.

    தோனி

    தோனி

    ஐபிஎல் தொடரின் போது அவர் அளித்த பேட்டியில், பெரும்பாலும் அடுத்த வருடம் எனக்கு சென்னையில் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். எனது கடைசி போட்டி சென்னையில் இருக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் தோனி இந்த வருடம் ஓய்வு பெற மாட்டார். அடுத்த வருடம்தான் ஓய்வு பெறுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் அதற்கு அடுத்த போட்டியிலேயே தோனி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறினார்.

    பஞ்சாப்

    பஞ்சாப்

    பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி லீக் ஆட்டத்திற்கு முன் டாஸ் போட்ட போது பேசிய தோனி, என்னை அடுத்த வருடம் நீங்கள் மஞ்சள் உடையில் பார்ப்பீர்கள். ஆனால் நான் சிஎஸ்கே அணியில் ஆடுவேனா இல்லையா என்பது உறுதி கிடையாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கணிக்க முடியாத சூழ்நிலைகள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக அடுத்த வருடம் 2 அணிகள் வருகின்றன. இதனால் ரிட்டென்சன் எப்படி இருக்கும் என்று தெரியாது, என்று குறிப்பிட்டார்.

    குழப்பம்

    குழப்பம்

    இதனால் தோனி சிஎஸ்கே அணியில் ஆடுவாரா மாட்டாரா என்பது பெரிய குழப்பமாகவே இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணி இதில் உறுதியான நிலைப்பாடு ஒன்றை எடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி சிஎஸ்கே அணியில் அடுத்த வருடம் கண்டிப்பாக தோனி ஆடுவார் என்றே கூறப்படுகிறது. அடுத்த வருடம் நடக்கும் மெகா ஏலத்தில் தோனியை கண்டிப்பாக சிஎஸ்கே ரீடெயின் செய்யும் என்கிறார்கள்.

    ரீடெயின்

    ரீடெயின்

    சிஎஸ்கே ரீடெயின் செய்யும் முதல் வீரர் தோனிதான் என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எத்தனை வீரர்கள் ரீடெயின் செய்ய அனுமதித்தாலும் முதல் நபராக தோனியைத்தான் சிஎஸ்கே ரீடெயின் செய்ய உள்ளதால் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மற்றபடி ருத்துராஜ், ஜடேஜா, டு பிளசிஸ், சாம் கரன் ஆகிய மூவர் ரீடெயின் பட்டியலில் அடுத்தடுத்து இடங்களில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    தோனி

    தோனி

    தோனியின் பேட்டிங் பார்ம் அல்லது கீப்பிங் குறித்தெல்லாம் சிஎஸ்கே அணி கவலைப்படவே இல்லை என்றே கூறப்படுகிறது. என்ன நடந்தாலும் தோனியை மட்டும் சிஎஸ்கே விடாது. அடுத்த வருடம் அவர் சென்னையில் ஓய்வு பெறுவார். சென்னையில் விடை கொடுப்பார். அதற்கு முன்பாக தோனி சிஎஸ்கேவில் இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பு கிடையாது என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    IPL 2021: Will Dhoni play for CSK next season? all you need to know about retention.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X