சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜடேஜாவிற்காக கோடிகளை விட்டுக்கொடுத்த தோனி.. உருக்கமான முடிவு.. ஏன் இப்படி? சிஎஸ்கேவில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: சிஎஸ்கேவில் தோனியை விட அதிக விலைக்கு ஜடேஜா ரிடெயின் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பின் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Dhoni, Kohli, Rohit, Pant retained for IPL 2022 | OneIndia Tamil

    2022 ஐபிஎல் தொடருக்கான விறுவிறுப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கிவிட்டது. 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஜனவரி கடைசி வாரம் நடக்க உள்ளது.

    தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்! தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்!

    அதற்கு முன் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்று பிசிசிஐ ரீடெயின் வாய்ப்பு அளித்தது. இதற்கான ரீடெயின் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

     தோனி என்ன சொன்னார்

    தோனி என்ன சொன்னார்

    2022 தொடருக்கான ரிட்டென்ஷனுக்கு முன்பே தோனி சிஎஸ்கே அணியில் தொடர்வேன் என்று அறிவித்து இருந்தார். அடுத்த 5 வருடங்களுக்கு கூட ஆடுவேன் என்று தோனி சென்னையில் நடந்த விழாவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தோனி சிஎஸ்கே அணியில் மீண்டும் பல கோடிகளுக்கு ரீடெயின் செய்யப்படுவதை விரும்பவில்லை. இது அணியின் எதிர்காலத்தை பாதிக்கும்.

    பாதிப்பு

    பாதிப்பு

    தோனியை 16 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ரீடெயின் செய்தால் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி மற்ற வீரர்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும். இதன் காரணமாக தோனி தன்னுடைய வருமானத்தை குறைத்துக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி ரீடெயின் செய்யும் போது குறைந்த விலைக்கு ரீடெயின் செய்தால் போதும் என்று தோனி கூறியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

     பிசிசிஐ ரூல்

    பிசிசிஐ ரூல்

    இந்த நிலையில்தான் பிசிசிஐ ரூல்படி 4 வீரர்களை ரீடெயின் செய்தால் 42 கோடி ரூபாயை அவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். முதல் ரீடெயின் வீரருக்கு 16 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இரண்டாவது ரீடெயின் வீரருக்கு 12 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். மூன்றாவது ரீடெயின் வீரருக்கு 8 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். நான்காவது ரீடெயின் வீரருக்கு 6 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

    தோனி என்ன செய்தார்

    தோனி என்ன செய்தார்

    இந்த நிலையில்தான் தோனி முதல் ரீடெயின் வீரராக களமிறங்க விரும்பவில்லை. முதல் இடத்தை அவர் ஜடேஜாவிற்கு விட்டுக்கொடுத்துள்ளார். கடந்த 3 வருடமாக சிஎஸ்கேவில் டாப் வீரர் ஜடேஜாதான். 2020ல் சிஎஸ்கேவில் மொத்த அணியும் திணறிய போது கூட ஜடேஜா சிறப்பாக ஆடினார். சிஎஸ்கேவின் டாப் வீரராக ஜடேஜா திகழ்ந்து வருகிறார்.

    அதிக தொகை

    அதிக தொகை

    முறைப்படி பார்ம் அடிப்படையில் பார்த்தால் ஜடேஜாவிற்குத்தான் சிஎஸ்கேவில் அதிக தொகை கொடுக்க வேண்டும். அவர் வருங்கால சிஎஸ்கே கேப்டனாகும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவே ஜடேஜாவிற்கு முதல் இடத்தை தோனி விட்டுக்கொடுத்தாக கூறப்படுகிறது. அவரை முதல் வீரராக ரீடெயின் செய்யுங்கள், என்னை இரண்டாவதாக செய்தால் போதும் என்று ஜடேஜா குறித்து தோனி சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளாராம்.

    மாற்றம்

    மாற்றம்

    தோனி, ஜடேஜா போக சிஎஸ்கேவில் மொயின் அலி 8 கோடி ரூபாய்க்கும், ருத்துராஜ் 6 கோடி ரூபாய்க்கும் ரீடெயின் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே தோனி குறைந்த தொகைக்கு ரீடெயின் செய்யப்பட்டார். அதேபோல் ஏலத்தின் போது ரெய்னா, டு பிளசிஸ், பிராவோ போன்ற வீரர்கள் மீண்டும் சிஎஸ்கேவில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் அதே கோர் அணியை சிஎஸ்கே எடுக்கும் என்கிறார்கள்.

    English summary
    IPL 2022: Why did Dhoni give up the first retention option to Jadeja in CSK team? What happened?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X