சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லேட் ஆக்காதீங்க.. ம்ம் வேகம்! சட்டென வந்து ரெய்டு விட்ட இறையன்பு! திரும்பிய "தலைகள்".. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதி பணிகளை தலைமை செயலாளர் வெ இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ்நாட்டில் பருவமழை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே காற்றடுக்கு மேல் சுழற்சி காரணமாக சென்னை தொடங்கி பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

வரும் நாட்களில் பருவமழை தொடங்கியதும் இன்னும் தீவிரமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். லேட் ஆக்காதீங்க.. ம்ம் வேகம்! சட்டென வந்து ரெய்டு விட்ட இறையன்பு! திரும்பிய "தலைகள்".. என்ன நடந்தது?

ஆனால் இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவையில் நீடிக்கும் பதற்றம்..போலீஸ் குவிப்பு.. தலைமைச் செயலர் இறையன்பு பரபர ஆலோசனை..144 தடை வருமா? கோவையில் நீடிக்கும் பதற்றம்..போலீஸ் குவிப்பு.. தலைமைச் செயலர் இறையன்பு பரபர ஆலோசனை..144 தடை வருமா?

சென்னை

சென்னை

இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டு உள்ளது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வருகின்றனர். பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை நெருங்கி வருவதால் இந்த பணிகள் வேகமாக செய்யப்பட்டு வருகின்றன., இன்னும் பல ஏரியாக்களில் பணிகள் முழுமையாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மழை

மழை

சில இடங்களில் 95 சதவிகிதம் வரை பணிகள் முடிவடைந்து உள்ளன. இதையடுத்து கடந்த வாரம் மழை பெய்த போது சென்னையில் சோதனை செய்யப்பட்டது. மழை நீர் எப்படி வெளியேறுகிறது என்பது சோதனை செய்யப்பட்டது. வெள்ள நீர் வடிகால் வசதி சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து அதை வீடியோவாக எடுத்து அனுப்பும்படி தலைமை செயலாளரும் மாநகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்படியே அதிகாரிகள் வீடியோக்கள் எடுத்து அனுப்பி இருந்தனர்.

வெள்ளம்

வெள்ளம்

சென்னையில் பல இடங்களில் கடந்த வாரம் மழை பெய்த உடனே வெள்ளம் வடிந்தது. இந்த நிலையில்தான் தற்போது வெள்ள வடிகால் தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து தலைமை செயலாளர் வெ இறையன்பு வெள்ளம் நீர் வடிகால் வசதி பணிகள் செய்யப்பட்டு வரும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மாநகர ஆணையர் ககன் தீப் சிங் மற்றும் தலைமை செயலாளர்கள் இறையன்பு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அடையாறு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் வடிகால் எப்படி மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் குழிகள்

அதிகாரிகள் குழிகள்

அங்கே இருந்த அதிகாரிகளிடம்.. மீதம் உள்ளே பணிகளை வேகமாக முடியுங்கள். குழிகளை மழைக்கு முன் மூட வேண்டும். பணிகளை துரிதப்படுத்துங்கள். பணிகளை தாமதம் செய்ய வேண்டாம். மீதம் உள்ள பணிகளை 10-15 நாட்களில் முடித்துவிடுங்கள் என்று உத்தரவிட்டார். அதேபோல் ஆறுகளில் இருக்கும் களைகளை நீக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் வேகமாக ஓடும். அந்த பணிகளையும் முடுக்கி விடுங்கள் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு சென்றார். அதிகாரிகளிடம் இன்று அதிகாலை அவர் கண்டிப்புடன் பேசி.. பணிகள் குறித்த ரிப்போர்ட்டுகளை கேட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Iraianbu inspected Chennai Roads for the storm water drain ahead of the monsoon season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X