சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பின்னாடி ஜெயலலிதா படம்.. அந்த கெட்டப்.. ஆஹா.. இது அது மாதிரி இருக்கே!

அக்னிதேவ் படம் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கிளம்பியது புதிய சர்ச்சை... சகுந்தலா தேவியும் ஜெயலலிதாவா?- வீடியோ

    சென்னை: பின்னாடி ஜெயலலிதா படம்.. ஆஹா... இந்த அக்னிதேவ் படம் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டிவிடும் போல இருக்கே!!

    சகுந்தலா தேவி பட டிரெய்லர் வெளியாகி உள்ளது. அரசியல் படம் என்று சொல்கிறார்கள். நடிகை மதுபாலா வில்லத்தனமான பெண் அரசியல்வாதியாம். யூ-டியூப்ல முதல் இடத்தில் இருப்பது இந்த ட்ரைய்லர்தான்.

    அரசியல்வாதியாக நடிப்பதும், அரசியல் படம் எடுப்பது நமக்கு புதிது கிடையாதுதான். ஆனால்.. மதுபாலாவின் "அந்த" கெட்டப்தான் நமக்கு இடிக்குது... எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு. பளிச்னு வேறு கண்ணு முன்னாடி அந்த உருவம் வந்து வந்து போகுது.

    தடித்த வார்த்தைகள்

    தடித்த வார்த்தைகள்

    சரி நமக்குதான் ஏதோ பிரமை போல என்று நினைத்து டிரெய்லரை பார்த்தால், அந்த ட்ரைலர் இன்னும் உதைக்குது. மிரட்டல் குரல், பழிவாங்கும் தோரணை, ஆவேச முகம், கோபமான பாவனைகளுடன் வசனம் தடித்த வார்த்தைகளுடன் தெறித்து விழுகிறது.

    எத்தனை ஆம்பளைங்க

    எத்தனை ஆம்பளைங்க

    அதுவும் எப்படி தெரியுமா? "'என் வீல் சேர் டயரை நக்கிட்டு கெடக்குறதா இருந்தா கெடங்க" என்று சொல்லவும் தலைக்கணம் பிடித்த ஒரு அரசியல்வாதி என்று இந்த வரிகளில் தெரிந்துவிட்டது. போதாக்குறைக்கு "உன்னை மாதிரி ஆம்பளைங்க எத்தனை பேரை காலுக்குக் கீழ போட்டு நசுக்கி இந்த இடத்துக்கு வந்துருக்கேன் தெரியுமா" என்கிறார்.

    டயர் நக்கி

    டயர் நக்கி

    இப்போது என்ன பிரச்சனை என்றால், "டயர் நக்கி" என்ற வார்த்தை ஃபேஸ்புக், ட்விட்டர்களில் ரொம்ப ஃபேமஸ்! இந்த வார்த்தைகள் யாரைக் குறிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். இப்போது மதுபாலா தன் வசனத்தில் "டயர்நக்கி" என்று சொல்லவும் இந்த கெட்டப் யாரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஓராயிரம் கேள்விகளை எழுப்பி உள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக பின்னால் ஜெயலலிதா படம் வேறு சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது.

    சூடாக்கி விட்டது

    சூடாக்கி விட்டது

    இப்படி ஒரு ட்ரெயிலரை போட்டு விட்டு எல்லோரையும் சூடாக்கிவிட்டு, படக்குழு கூலாக தன் வேலையை பார்த்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பிரச்சினைகளை மறக்கடிக்க இதோ இன்னும் ஒரு டேப்லெட்.. அரசியல்வாதிகள் என்னென்ன செய்யப் போகிறார்களோ!

    English summary
    Is agni dev movie criticizes any Political Party?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X