சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?

வேளாண் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கூடி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒருபுறம், வேளாண் மசோதாவை ஆதரித்து முதல்வர் ஆணித்தரமாக பேசுகிறார்.. மற்றொரு புறம் ராஜ்யசபாவில் அதிமுக கடுமையாக எதிர்த்து பேசியுள்ளது.. என்னதான் பிரச்சனை? ஒரே கட்சிக்குள் ஏன் இந்த முரண்பாடு? அதிமுக தடுமாறுகிறதா? மத்திய அரசின் இந்த வேளாண் மசோதா சட்டம் சொல்லுவது என்ன? என்ற கேள்விகளும், சந்தேகங்களும் பரவலாக எழுந்து வருகின்றன.

விவசாய விளைபொருட்கள் மூலம் பெரிய வியாபாரிகள் பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில் 3 விவசாய சட்டங்கள் அதாவது 1. விளைவிப்பதற்கு உண்டான சட்டம் 2. கொள்முதல் செய்வதற்கான சட்டம் 3. கொள்முதல் செய்ததை இருப்பு வைப்பதற்கான சட்டங்கள் ஆகும்.

1. அத்தியாவசிய பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டை தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாக கொள்ளப்படும்.

2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்

3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.

இந்த சட்டங்கள் எதற்காக என்றால், இந்திய விவசாயிகளுடைய வருமானத்தை அதிகப்படுத்தி விவசாய குடும்பங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஆனால், இது கார்ப்பரேட்களுக்கு, தனியார்களுக்கு பலன்தரக்கூடியது, அவர்களுக்கு சாதகமானது.. நம் விவசாயத்தை அழிப்பது.. நாட்டின் உணவுப்பாதுகாப்பை அழிப்பது என்ற விமர்சனம் பரவலாக எழுந்து வருகிறது.

மோடி

மோடி

பிரதமர் மோடி இதை பற்றி சொல்லும்போது, "குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை தொடரும். அரசுக் கொள்முதல் தொடரும்... நம் விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம்... அவர்களுக்கு ஆதரவான எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்... வரக்கூடிய தலைமுறைகளில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்தையும் செய்வோம்" என்று ட்விட்டரில் உறுதி தந்துள்ளார்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

நம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதை ஆதரிக்கிறார்.. இதற்கு சில காரணங்களையும் சொல்கிறார்.. அப்படியென்றால் ராஜ்ய சபாவில் அதிமுக எம்பிக்கள் ஏன் கொந்தளித்தார்கள்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

அரசியல்

அரசியல்

முக ஸ்டாலின் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.. ஆனால் "எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்கிறார் என்று முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்... வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது என்றும், இதனால் விவசாயத்திற்கு சிக்கல் இல்லை, விவசாயிகளை பாதிக்கும் எந்த அம்சங்களும் வேளாண் மசோதாவில் இல்லை, இந்த விவசாய சட்டங்களால் மக்கள் நலன் அடைவார்கள்" என்கிறார்.

இந்த மசோதாக்களில் உள்ள பொதுவான சாதகங்கள் என்னென்ன என்று பார்ப்போம்:

இதுவரைக்கும் விவசாயிகள் தங்களது அரிசி, கோதுமை போன்ற விளைபொருட்களை அரசு நிர்ணயிக்கும் விலையில், அரசின் கொள்முதல் நிலையங்களில் மட்டுமே விற்கவேண்டும், வேறு யாருக்கும் விற்கக்கூடாது என்றிருந்தது.. இப்போது ஒரு சிறு மாற்றம்.. அதாவது விவசாயிகள் அவர்களது விளை பொருட்களை யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களிடமே விற்றுக்கொள்ளலாம், அதை தொடர்ந்தும் விற்கலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.

 தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

இதைத்தானே விவசாயிகள் கடந்த 30 வருஷமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. அன்று காங்கிரசும் இதைதான் தங்களது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தது... தன்னுடைய விளைபொருளுக்கு சம்பந்தப்பட்ட விவசாயிதான் விலை நிர்ணயிக்கவேண்டும் என்பதுதான் ஆரம்பம் முதல் இருக்கும் கோரிக்கை.. அது இப்போது நிறைவேறும்போது, விவசாயிகள் நேரடியாக பயனடையதான் செய்வார்கள்.. எந்த விதத்திலும் விவசாயிக்கு பாதிப்பு ஏற்படாது.. இனிவரும் காலங்களில் விவசாயிகளின் நிரந்தர வருமானத்திற்கு இந்த முறைதான் சிறந்தது என்பதே ஒருசாரார் வாதம்.

இந்த மசோதாக்களில் உள்ள பொதுவான பாதகங்கள் என்னென்ன என்று பார்ப்போம்:

இதுவரை விவசாயிக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் குறைந்தபட்ச விலையில் அரசு கொள்முதல் செய்து கொண்டிருந்தது.. அதாவது சந்தையில் விலை அதிகம் இருந்தால் விவசாயி அங்கு விற்பனை செய்யலாம். விலை குறைந்தால் அரசு கொள்முதல் நிலையங்களில் கொடுத்துவிடலாம்... இதனால் அந்த விவசாயிக்கு நஷ்டம் வராது.

வருமானம்

வருமானம்

இப்போதுகூட விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவே மத்திய அரசு இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படாத பொருட்களுக்கும் அதை நிர்ணயித்து இருக்கலாம்.. அதன்மூலம் அவர்களின் நஷ்டத்தையும் தவிர்த்திருக்கலாம்.. எதுக்காக தனியாரிடம் அக்ரிமெண்ட் போட வேண்டும்.. அப்படியென்றால், தனியார்கள் நிர்ணயிக்கிறதுதான் விலை... இவங்களுடைய முழு கட்டுப்பாட்டில்தான் சந்தை இருக்கும், இயங்கும்!

புரோக்கர்கள்

புரோக்கர்கள்

சந்தையில் விலை அதிகமாக இருந்தாலும் ஒரு ஏழை விவசாயி அக்ரிமென்ட் போட்டபடி, உரிய விலைக்கு தான் பொருட்களை விற்க வேண்டியிருக்கும்.. அதனால் பெரும்பாலான லாபம் புரோக்கர்களுக்குதான் போகுமே தவிர, அந்த விவசாயியிக்கு நேரடியாக போய் சேராது.. அதேபோல, பணம் இருக்கும் பெரிய வியாபாரிகள்தான் ஸ்டாக்கில் எல்லா பொருட்களையும் வைத்து கொள்ள முடியுமே தவிர, சாதாரண விவசாயியால் அது முடியாது.

 விலை அதிகம்

விலை அதிகம்

மேலும், எல்லா பொருளையும், எல்லா இடங்களிலும் கொண்டு போய் விற்க முடியாது.. குறைந்த விலையில் ஒரு பொருள் கிடைத்தால், அதை வாங்கி கொண்டு, எங்கு தேவை அதிகமாக இருக்கிறதோ அங்கு அதிக விலைக்கு கொண்டு சென்று விற்க முடியும்.. இதனால் பயன்பெற போவதும் பெரிய வியாபாரிகளும், புரோக்கர்களும்தானே தவிர, ஏழை விவசாயிகள் இல்லை.

 மண்டி முறை

மண்டி முறை

மண்டி முறையை ஒழித்து கட்டுவதுதான் இந்த 3வது அம்சம்.. இதைதான் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. விவசாயிகளின் போராட்டமும் இதை மையப்படுத்திதான் எழுந்துள்ளது.. ஏற்கெனவே ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் மண்டி முறை சிக்கலில் உள்ளதால், தனியார்கள், புரோக்கர்கள், ஏஜெண்ட்கள்தான் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பார்கள். இதுதான் இப்போது சிக்கலாக எழுந்துள்ளது. கார்ட்டெல் என்ற முதலாளிகள், கார்ப்பரேட்கள் தங்களுக்குள் அக்ரிமென்ட்டை போட்டுக் கொண்டு, இந்த பொருளுக்கு இந்த விலைதான் கொடுக்கப் போகிறோம் என்று நிர்ணயித்துக் கொள்வார்கள்.. அப்படி என்றால், இதில் எங்கு சந்தைப் போட்டி உள்ளது? போட்டி சந்தை என்பது உருவாகவே சாத்தியம் இல்லை.

 குறைந்தபட்ச ஆதார விலை

குறைந்தபட்ச ஆதார விலை

இதில் இன்னொரு கவலையும் சேர்ந்துள்ளது.. அதாவது, வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற பிரிவில் அரசு கொள்முதல் அளவு பெருமளவு குறைந்து விடும்.. இந்த குறைந்தபட்ச ஆதார விலை குறித்து 3 சட்டங்களிலுமே சொல்லப்படவில்லை.. மறைமுகமாககூட குறிப்பிடப்படவில்லை.. ஒருவேளை இது நடைமுறைக்கு வந்து, மெல்ல மெல்ல குறைந்த பட்ச ஆதாரவிலையில் அரசு கொள்முதலையே இல்லாமல் செய்வதற்கான அடித்தளமோ என்ற சந்தேகத்தையும் நிபுணர்கள் கிளப்புகிறார்கள்.

 கருத்துக்கள்

கருத்துக்கள்

இதுபோன்ற காரணங்களுக்காகவே அதிருப்திகளை இந்த மசோதாக்கள் பெற்று வருகின்றன.. இதில்தான் இருவேறு கருத்துக்களும் எழுந்து வருகின்றன.. எது எப்படி இருந்தாலும்சரி, இப்படி ஒரு சட்ட மசோதாவை கொண்டுவருவதற்கு பதிலாக முதலில் அந்தந்த மாநில முதல்வர்கள், மற்றும் அந்தந்த மாநில விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும்.. குறிப்பாக விவசாயிகள்தான் இந்த விஷயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள், நேரடியாக விளைவு-பலன்களை அனுபவிக்க போகிறவர்கள்.. வழக்கம்போல மத்திய அரசு இதையும் தன்னிச்சையாகவே அறிவித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

மசோதாக்கள்

மசோதாக்கள்

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போலவே, இந்த மசோதாவும் கொஞ்ச நாளில் பிரயோஜனம் இல்லாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தையும் தந்துவருகிறது. அதனால்தான் லோக்சபாவில் இந்த மசோதாக்களை ஆதரித்த அதிமுக, இப்போது, ராஜ்யசபாவில் மிகக் கடுமையாக எதிர்த்து பேசியிருக்கலாம் என்கிறார்கள்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதை எப்படி நம் மாநில அரசு ஒப்புக் கொண்டது என்பதும் நமக்கு சற்று குழப்பம்தான்.. நீட் தேர்வு உட்பட 8 வழிச்சாலை வரை தமிழகத்தை பாதிக்கும் சட்ட மசோதாக்களில் அதிமுக அரசு இன்னும் போதுமான எதிர்ப்பை காட்டவில்லையோ? விவசாயிகளுக்கு எதிரான ஒரு திட்டத்தை எப்படி நம் மாநில அரசு ஆதரிக்கலாம்? என்ற கேள்விகளும் எழுகின்றன.. ராஜ்யசபா எம்பிக்கள் ஒரு கருத்தும், எடப்பாடியார் ஒரு கருத்தும் சொல்கிறார்கள் என்றால், விவசாயிகளின் நலன் தொடர்பான முக்கிய மசோதாவை அதிமுக சரியாக ஆராயவில்லையா? ஏன் ஒரே கட்சிக்குள் இத்தனை தடுமாற்றம்?

 திமுக தலைவர்

திமுக தலைவர்

ஸ்டாலின் அரசியல் செய்வதாகவே வைத்து கொள்வோம்.. முதல்வர் சொல்வது போல, இது இந்திய விவசாயிகள் நலனை காக்க கூடியது, வருமானத்தை பெருக்க கூடியது என்றால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ஏன் இத்தனை எதிர்ப்பு கிளம்புகிறது? வேளாண் மசோதாவை, பாஜகவின் கூட்டணி கட்சிகளே எதிர்க்கின்றதே? ஹர்சிம்ரத் கௌர் ஏன் பதவி விலகினார்? ஏன் ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு நெருக்கடி வருகிறது? என்ற சந்தேகங்களும் யதார்த்தமாகவே எழுகின்றன.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அதனால், இப்படிப்பட்ட வேளாண் மசோதாக்கள் ஒருசில முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்குமே தவிர, வளம்கொழிக்க வைக்குமே தவிர, ஏழை விவசாயிகளை பாதுகாக்காது என்பதே பரவலான மக்களின் கருத்தாக உள்ளது. இதை நம் முதல்வர் மீண்டும் பரிசீலிப்பாரா என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் எழுந்துள்ளது.

 நிறைவேற்றம்

நிறைவேற்றம்

இது எல்லாவற்றிற்கும் "மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், கடும் அமளிகளுக்கு மத்தியில், மசோதாக்கள் நிறைவேற்றம்" என்றாலே, அது நிச்சயம் நமக்கு நல்லது தரக்கூடிய மசோதாக்கள் இல்லை என்பதே இதன் அர்த்தம்! அவரவர் தட்டில் என்ன உணவு இருக்கவேண்டும் என்பதை அவரவர் தான் முடிவு செய்யவேண்டும் என்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது!!

English summary
Is AIADMK struggles to take a stand on Farmers bill
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X